வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்!
வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்.
வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்துள்ளது.
நாடு முழுதும், 1,364 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இதில், 194 வகை பறவை இனங்கள், உலக அளவில் அழியும் நிலையில் இருப்பதாக, பட்டியலிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து வளர்ப்பவர்களும் பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது. இதற்கான வசதி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அழிவின் விளிம்பில் உள்ள ...









