சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Author: Kodanki

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் : சென்னை விழாவில் இலங்கைஅமைச்சர் பேச்சு !

செய்திகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் அமைப்போம் என்று சென்னையில் ஒரு விழாவில் இலங்கை கல்வி அமைச்சர்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஊடகம் மற்றும் நுண்கலை  சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய 'கலைச்சங்கமம் ' 2017 நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நேற்று நடை பெற்றது . இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர்  திரு ஜி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள்   மங்கல இசையாக ராஜு மற்றும் மணிகண்டன் குழுவினரின் நாதஸ்வர இசையுடன் தொடங்கின. பிரிட்ஜ் அகாடமியின் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும், மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இசையால் நினைவஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கிரேடு தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்ற மாணவக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு , கீ போர்டு கச்சேரிகள் நடைபெற்றன. இலங்...
உலக தமிழ் வம்சாவளியினர் முன்னிலையில்  பிரமாண்டமாக நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழா

உலக தமிழ் வம்சாவளியினர் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழா

செய்திகள்
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 3ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழாவை உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமைதாங்கி நடத்தினார். தமிழ்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவை ஜான் தொகுத்து வழங்கினார். அமெரிக்கா, நார்வே, கனடா, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளி அமைப்பினர் வந்திருந்தனர். நார்வே நாட்டின் ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், அமெரிக்க தொழிலதிபரும், டாக்டருமான பழனி.ஜி.பெரியசாமி, குமரி அனந்தன், இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது, யுகே உலக தமிழ் அமைப்பு நிறுவனர் ஜேக்கப், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஜெகன், இசையமைப்பாளர் ஹிப்ஆப் தமிழா ஆதி, தொழிலதிபர...
ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி

ஏறுதழுவுதல் எங்கள் பண்பாடு- ஜல்லிக்கட்டுக்காக மதுரையிலும் இளைஞர்கள் எழுச்சி

செய்திகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி இன்று மதுரையில் மிகப்பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த 2014ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜனவரி14ம் தேதி அந்த அறிவிப்பை தடை செய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை  முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாணயம், தபால்தலை முதல்வருக்கு எம்ஜிஆர் உறவினர் நன்றி கடிதம்

செய்திகள்
இது குறித்து எம்ஜிஆர் உறவினர் தீபன் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு எழுதிய கடித விவரம்: கோடி மக்களின் மனசில் நீங்கா இடம்பிடித்த எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் உருவம் பொறித்த நாணயங்கள், அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட வேண்டும் என்று பாரத பிரதமருக்கு வேண்டுகோள் வைத்தோம். அதே கருத்தை வலியுறுத்தி நீங்களும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதே நேரம் அதற்கான எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நீண்டகால கனவும், ஆசையுமாக அவரின் விருப்பம் படி எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்து வரும் மாற்றுத் திறானிகள் பள்ளியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மறைந்த முதல்வர் அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களோ அதே அளவு சிறப்பான ஒரு விழாவாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புரட்சித்தலைவரின் ...
மறைந்த முதல்வர் ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்று முதல் ஆராய்ச்சி ஆங்கில நூல் வெளியீடு  ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே வெளியிட இலங்கை அமைச்சர் பெற்றுக் கொண்டார்

மறைந்த முதல்வர் ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்று முதல் ஆராய்ச்சி ஆங்கில நூல் வெளியீடு ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே வெளியிட இலங்கை அமைச்சர் பெற்றுக் கொண்டார்

செய்திகள்
தமிழக அரசியலில் இரும்பு மனுஷியாக இந்திய அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்ககை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரை வடிவில் பேராசிரியர் தமிழரசன் என்பவர் எழுதியிருக்கிறார். இதற்காக 2009ம் ஆண்டில் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஜெயலலிதாவிடமே அனுமதியும் பெற்றிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி கட்டுரையாக எழுத அனுமதித்து ஜெயலலிதாவும் கடிதம் கொடுத்திருக்கிறார். இந்த ஆராய்ச்சி கட்டுரையின் ஆங்கில நூல் சென்னையில் நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழாவில் வெளியிடப்பட்டது. உலக வம்சாவளி அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆண்டுதோறும் உலக தமிழ்ர திருநாள் விழாவை நடத்துவது வழக்கம். 3வது ஆண்டாக இந்தாண்டு நடைபெற்ற விழாவில் நார்வே நாட்டில் உள்ள ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், ...
புகுந்த வீட்டுக்கு விசுவாசமும், பிறந்த வீட் டுக்கு பெருமையும் சேர்க்கிறவர்கள் புலம்  பெயர்ந்த தமிழர்கள்  இயக்குனர் பாரதிராஜா பாராட்டு

புகுந்த வீட்டுக்கு விசுவாசமும், பிறந்த வீட் டுக்கு பெருமையும் சேர்க்கிறவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு

செய்திகள்
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 3ம் ஆண்டாக சென்னையில் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்க நார்வே ந £ட்டின் ஓசுலே மாநகர மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராத கிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், குமரி அனந்தன், அமெரிக்க தொழில் அதிபர் டாக்டர் பழனி,ஜி.பெரியசாமி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழிலதிபர் இளம்பாரி கருணாகரன், கவிஞர் ரவிபாரதி, ஹிப்ஆப் தமிழா ஆதி, பாடகர் வேல்முருகன், ஆவணபட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன், நடிகர் ஜெகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 3 வயதில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து நார்வே நாட்டுக்கு சென்று வாழ்ககையில போராடி இன்றைக்க...

ரஜினி, விஜய்க்கு நன்றி – சிரஞ்சீவி

செய்திகள்
  இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் ரீமேக் படமான 'கைதி நம்பர் 150' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சிவி, இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தர உதவிய விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் திரையுலகில் ரீஎண்ட்ரி செய்ய முடிவு செய்தபோது பல கதைகள் கேட்டபோதும் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்றும் ஆனால் 'கத்தி' படத்தை பார்த்த பின்னர், இதுதான் தனக்கு பொருத்தமான படம் என்று தான் முடிவு செய்ததாகவும் சிரஞ்சீவி கூறினார். கத்தி ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் நானே முன்னின்று உரிமையை பெற்று தருகிறேன் என்று முன்வந்த விஜய்க்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய 150வது படம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும...

மீண்டும் நாடக மேடை

செய்திகள்
1980-90கள் வரை பெரும்பாலும் நாடகங்கள் திரைப்படங்களை போல் வெளிவந்து அதுவும் சனி மற்றும் ஞாயிறுகளில் சபாக்களில் கூட்டம் நிரம்பி வழிந்து வந்தது. ஆர்.எஸ்.மனோகர், சோ, எஸ்.வி.சேகர், விசு, காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன் இன்னும் பிற நாடக கலைஞர்களால் நாடகங்கள் மேடை ஏறிவந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், காலம் செல்ல செல்ல ரசிகர்களும் குறைந்து கலைஞர்களும் வயது மூப்பின் காரணமாக நடிப்பது குறைய தொடங்கியது.அப்படியும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனியார் தொலைக்காட்சிகளின் வருகை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக நாடக தொழில் நலிவடைந்து விட்டது. தொலைக்காட்சிகளிலும் மெகா, மகா என சீரியல்கள் படையெடுத்து இன்றைய பெண்கள், முதியோர் என அனைவரும் டிவி முன்பு அமர்ந்து சீரியலே கதி என்றாகிவிட்டது. இதிகாச புராணங்கள் முன்பெல்லாம் மேடையேறி அதற்கென்று கலை...

ஆஸ்கார் விருதுக்கும் மேல்

செய்திகள்
ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "தர்மதுரை" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறினார். அவர் கூறுகையில், "சிறு வயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கேட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான். தாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்ற...

பயந்தாங்கோழி

செய்திகள்
சிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14முதல் துவங்கவுள்ளது.இப்படத்தை கோலிசோடாவில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார் இசை பாபு நாத் மற்றும்  லிஜோ   ஒளிப்பதிவு எஸ்.கண்ணன் இவர் இந்தியில் நட்டியுடன்(நட்ராஜ் ) பல படங்களில் பணியாற்றியவர் இப்போது தமிழுக்கு வந்துள்ளார்' ​.​  எடிட்டிங்   சதுரங்க வேட்டை படத்தில்  அசோஸியேட் எடிட்டராக  பணியாற்றிய திலீப்,  நாயகனாக கோலிசோடா புகழ் , பசங்க படத்தில் தேசிய விருது வாங்கிய  கிஷோர்  நடிக்கிறார் இவருடன் பல முண்ணனி நடிகர்கள் நடிகைகள்  நடிக்கிறார்கள்  படம் சென்னையில் தொடங்கி புதுச்சேரி,ஊட்டி என வளரவிருக்கிறது. இப்படத்தை  ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் நான்,சாருலதா போன்ற பல வெற்றி  படங்களை விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  ...