தினகரன் வருகை… ஸ்லீப்பர் செல் அச்சம்… அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு
தினகரன் வருகை.. ஸ்லீப்பர் செல் அச்சம்...
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தலைமைக் கொறடா பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானதாக உள்ளது. அதை மீறி நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரனின் உத்தரவுக்கு எதிராகவும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் சட்டசபையில் செயல்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி இழப்பு நடவடிக்கை பாய்ந்தது.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரனே எம்.எல்.ஏ.யாகி சட்டசபைக்குள் வருகிறார். அவருக்கு ஏற்கனவே அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியாளர்களிலும் சிலீப்பர் செல் என்ற வெளிக்குத் தெரியாத ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சட்டசபையில் எழும் பிரச்சினைகளில் அப்படிப்பட்டவர்கள், டி.டி.வ...









