ஜல்லிக்கட்டு தடைக்கு வெளிநாட்டு சதி மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர் பரபரப்பு பேச்சு
விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது.
விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி சேர்மன் சாய்பிரகாஷ் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர், நடிகர் விவேக், நடிகர் ஜெகன், எம்.எல்.ஏ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா தொடங்கும் முன்பு நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
நடிகர் எஸ் வி.சேகர் பேசும் போது : மரம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் கூடியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மரம் மாதிரி நிக்குறியேன்னு யாராவது சொன்னால் வருத்தப்படாதீர்கள். மரம் போல நிற்பது கஷ்டம். இன்னிக்கு சென்னை கார்ப்ரேஷன் வைக்கும் மரங்களை வாயால் ஊதினாலே விழுந்து விடும். அவ்ளோ மோசமாக இருக்கிறது.
...
