உலக தமிழ் வம்சாவளியினர் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற உலக தமிழர் திருநாள் விழா
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 3ம் ஆண்டு உலக தமிழர் திருநாள் விழாவை உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமைதாங்கி நடத்தினார்.
தமிழ்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவை ஜான் தொகுத்து வழங்கினார். அமெரிக்கா, நார்வே, கனடா, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளி அமைப்பினர் வந்திருந்தனர்.
நார்வே நாட்டின் ஓசுலே மாநகர பெண் மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், அமெரிக்க தொழிலதிபரும், டாக்டருமான பழனி.ஜி.பெரியசாமி, குமரி அனந்தன், இலங்கை வானொலி தொகுப்பாளர் அப்துல் ஹமீது, யுகே உலக தமிழ் அமைப்பு நிறுவனர் ஜேக்கப், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஜெகன், இசையமைப்பாளர் ஹிப்ஆப் தமிழா ஆதி, தொழிலதிபர...
