Author: Kodanki
தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்..!
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....
`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு…புத்தாண்டு கொண்டாடிய பின் டில்லி திரும்புவார்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றிருந்தார். அப்போது மர்ம கோவா பகுதியில் மக்களிடையே பேசும் போது, மாசற்ற கோவாவை தன் தாயார் சோனியா காந்தி மிகவும் விரும்புவதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியா காந்தி கடந்த 16-ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், சோனியா கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தனது நெருங்கிய நண்பர்களுடன் கடந்த 26-ம் தேதி கோவா சென்ற இவர் புத்தாண்டு கொண்டாடிய பிறகு வீடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு கோவாவில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது....
ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து சசிகலா மவுன விரதம்: தினகரன் பேட்டி
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி தினகரன் இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவரை சந்தித்து விட்டு சிறை வளாகத்தில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன், வாங்கிவிட்டேன். எதிர்கால திட்டங்களை எடுத்து கூறினேன், அனுமதி அளித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சிறையில் சசிகலா மவுனவிரதம் இருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை, பொய் பிரசாரம் செய்கிறார்கள். மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி, அதிகாரம் இருப்பதால் நீடிக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொதுச்செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது.
எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக...
தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அ.தி.மு.க. வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி (மேலூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்), துரை.தனராஜன் (உசிலம்பட்டி தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சேடபட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்)
மகேஸ்வரி ரவி (பொதுக் குழு உறுப்பினர், திருமங...
எம்ஜிஆர் பட டீசரை ஜனவரியில் பிரதமர் மோடி வெளியிட கோரிக்கை..!
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது.
1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது.
மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...
தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை ஆனால் சைவ மண்டபம் என்பதால் முடியவில்லை – ரஜினி
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அதற்கு முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி,
மதுரை என்றால் வீரத்திற்கு அடையாளம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்த போது அர்ச்சகர் தன்னிடம் என்ன நட்சத்திரம் என்று கேட்டார். அப்போது எனக்கு பிறந்தநாள், நட்சத்திரம், கோத்திரம் என எதுவுமே தெரியாது. அதையடுத்து எனக்கு அருகில் இருந்தவர் பெருமாள் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு தான் தெரிந்தது எனது நட்சத்திரம் பெருமாள் நட்சத்திரம் தான்.
மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள உங்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ரா...
பொங்கல் ரேசில் களமிறங்கும் விஷாலின் ‘சண்டக்கோழி-2’
பி.எஸ்.மிஸ்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.
இதில் `இரும்புத்திரை' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்தார்.
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகிறது.
`சண்டக்கோழி-2' படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட...
`குலேபகாவலி’ டிரைலர் நாளை வெளியீடு..!
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’.
புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விவேக் - மெர்வின் இசையில், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்...

