செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்..!
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது.
அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத் தொடங்கும் என்றும் கலாசாரம் மற்றும் தகவல் அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030-ஆம் ஆண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.
பழமைவாத இஸ்லாமிய ராஜ்ஜியம், 1970 களில் திரையரங்குகளைக் கொண்டிருந்தது, ஆனால் அவற்றை மூடுமாறு மதகுருக்கள் அதிகாரிகளை வற்புறுத்தி மூடவைத்தனர்.
கடந்த ஜனவரியில், மூத்த மதகுரு ஷேக் அப்துல் அஸீஸ் அல் அல்-ஷேக், திரையரங்குகளை அனுமதித்தால், அவை ஒழுக்கநெறிகளை சீர்குலைக்கும் என்று...









