சின்ன படங்களுக்கு வழிவிடுங்கள் நகுலின் செய் பட விழாவில் வேண்டுகோள்..!
ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ்இசையமைத்திருக்கும் இப்படத்தின்இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு,திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில்,‘ நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். திலீப், பிருத்விராஜ், ஜெயராம் போன்...









