புதன்கிழமை, ஜூலை 15
Shadow

Author: Kodanki

‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழ...
போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

போதைப் பொருள் விழிப்புணர்வை முன்னிட்டு கைப்பந்து போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஊராட்சியில் காட்டுப்பள்ளி அதானி பவுண்டேஷன் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பொது மக்களிடையே கையெழுத்து மற்றும் ஒரு நாள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதானி போர்ட் டெர்மினல் தலைவர் ராம்தேவ் கரன்சியாபாவனா, கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் திட்ட மேலாளர் ஜேசுராஜ், காட்டூர் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள், செல்வராமன், முத்து, கோபி, தொகுப்பாளர் செண்பகவள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்....
அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

அமெரிக்காவில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து- 5 பேர் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கா...
வைரலாகும் அகிலன் பட ’துரோகம்’ பாடல் !

வைரலாகும் அகிலன் பட ’துரோகம்’ பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'துரோகம்' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ், சிவம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.   https://youtu.be/rUER5mwz65w...
பிச்சைக்காரன் 2  ரிலீஸ் அப்டேட்!

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.  ...
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை சொல்லும் “இன் கார்” !

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை சொல்லும் “இன் கார்” !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  In Car  "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது… "இன் கார்"...
ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !! ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !! ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில், வைரலாகும் துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட டீசர் !! Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சா...
அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் தம்பி அபிஜித் பால்

அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் தம்பி அபிஜித் பால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *'தாதா 87', 'பவுடர்' வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த புதிய திரைப்படம்* *அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால்* திருநங்கைகளின் காதலை சொல்லும் 'தாதா 87', பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்ட 'பவுடர்', பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் 'ஹரா' போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார். சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்ப...
வசூலில் முன்னேறும் ‘பதான்’.. கொண்டாடும் ரசிகர்கள்!

வசூலில் முன்னேறும் ‘பதான்’.. கொண்டாடும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்....
படத்தைப் போலவே வைரலாகும் ‘லவ் டுடே’ மேக்கிங் வீடியோ!

படத்தைப் போலவே வைரலாகும் ‘லவ் டுடே’ மேக்கிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாகவுள்ளது. இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 45 நிமிடங்கள் உள்ள இந்த ...