வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்’ – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்’ – அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER
பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்' - அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை ''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'பனாரஸ்'. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் 'சேலஞ்சிங் ஸ்டார்' தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைப...
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    *நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி'* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு 'NBK 107' என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில்...
தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட டீசர்

தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*நடிகர் தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் 'மைக்கேல்' பட டீசர்* 'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார். :மைக்கேல்' படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை ந...
தீபாவளியை முன்னிட்டு வரும் 21 முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி

தீபாவளியை முன்னிட்டு வரும் 21 முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21 முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 12-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன. இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ...
தீபாவளி ரேஸில் முன்னிலையில் சர்தார்!

தீபாவளி ரேஸில் முன்னிலையில் சர்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை... என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக அக்-21 வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ். கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ...
அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!

HOME SLIDER, NEWS, politics, அரசியல்
96சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவரோடு போட்டியிட்ட எம்.பி., சசி தரூர் 1,603 வாக்குகள் பெற்று சசி தரூர் தோல்வியடைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் அப்போதைய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் தலைவர் பதவியை ஏற்பதாக இல்லை. அதன் பிறகு தற்காலிக தலைவராக மீண்டும் சோனியா காந்தி பதவி வகித்து வந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்த தேர்தலில் காந்தி மற்றும் நேருவின் குடும்பத்தினர் ய...
வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

வைரலாகும் வெற்றிமாறன் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
வைரலாகும் பத்து தல படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைபடம்!

வைரலாகும் பத்து தல படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும்...
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள். இதைத்...
தொடர்ந்து லீக் ஆகும் விஜய் பட காட்சிகள்!

தொடர்ந்து லீக் ஆகும் விஜய் பட காட்சிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு...