சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Uncategorized

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காலா படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் இடம் பெறும் ‘கண்ணம்மா...’ என்ற பாடலின் புரமோ வெளியானது. தற்போது காலா புரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்த புரமோவில், ‘நான் காலா... எமன், எமராஜ்’ என ரஜினி பேசும் வசனம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைப்பு

கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைப்பு

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 16 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே நேற்று குறைக்கப்பட்டது. இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையில் இருந்து லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசனை நடந்தது. இதில், மாநில அரசு தனது விற்பனை வரியை குறைத்து கொள்வதென முடிவானது. இதுதொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் விற்பனை வரியை குறைப்பதன் மூலம் பெட்ர...
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 7 நீதிபதிகள் நியமனம்

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 56 நீதிபதிகள் பணியில் இருந்து வருகின்றனர். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஏழு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குமாரி பி.டி.ஆஷா, நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட 7 நீதிபதிகளை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது....
காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இதுதொடர்பாக மத...
துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

துப்பாக்கிச்சூட்டில் பலியான எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் தடை

HOME SLIDER, NEWS, Photos, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்....
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்....
பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து `கோடிட்ட இடங்களை நிரப்புக' என்னும் படத்தை இயக்கினார் பார்த்திபன். அடுத்ததாக உள்ளே வெளியே 2 படத்தை இயக்கவிருக்கிறார். முழுநீள காமெடி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு ஓட்டல்காரரை காமெடியனாக்கி இருக்கிறார். சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை சாப்பிடும் ஓட்டல் ஒன்றை நடத்திவருபவர் கவிஞர் ஜெயம்கொண்டான். உதவி இயக்குனர்களுக்கு சலுகை விலை என்பதால் ஓட்டலில் கூட்டம் நிறையும். சில படங்களுக்கு பாடல்களும் எழுதி இருக்கிறார். இவரது ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை தனது அடுத்த படத்தில் முழுநீள காமெடியனாக்குவதாகவும், அதற்காக தாடி வளர்க்க வேண்டும் என்றும் கூறி சென்றிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத ஜெயம்கொண்டான் பார்த்திபனுக்காக தாடி வளர்த்து வருகிறார்....
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு  – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘. இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என...
மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட். இந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத...
விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதா...