உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?
2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில்,
நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும்.
அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?.
உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.
எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள்.
இதன் காரணமாக செயற்கைப் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் ஏற்படும்.
குறிப்பாக, யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தில் உடனடியாக இதன் பாதிப்புகளை அறிய முடியும். இதனால்தான், போர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தேசியப் பங்குச் சந்தையில் கடுமையான மாற்றம் இருந்தது.
இதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கையான...









