ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது....
உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?. உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் ஏற்படும். குறிப்பாக, யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தில் உடனடியாக இதன் பாதிப்புகளை அறிய முடியும். இதனால்தான், போர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தேசியப் பங்குச் சந்தையில் கடுமையான மாற்றம் இருந்தது. இதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கையான...
முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை!

முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
  மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க உள்ளது. சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை கடிதத்தில், சாதாரண தட்டச்சு பிழையாக பகல்பொழுதை குறிக்கும் ஆங்கில குறியீடான பி.எம். என்பதற்குப் பதிலாக, இரவு நேரத்தை குறிக்கும் ஏ.எம். என்ற குறியீடு, இடம் பெற்றுவிட்டது. இருந்தாலும் பிழை நேர்ந்ததன்படி அசாதரணமான நிலையில் நள்ளிரவில் சட்டசபையை கூட்டலாம் என்று சபாநாயகர் பிமன் பானர்ஜியும் கேட்டுக்கொண்டதால், மம்தா பானர்ஜி தலைமையில...
உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி!

உக்ரைன் தலைநகரில் நுழைந்தது ரஷிய படை… சண்டையில் ஏராளமானோர் பலி!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷிய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்கின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. ரஷிய போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷிய ப...
உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை தி.மு.க. கைப்பற்றி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் சேலம் தெற்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், ...
வேட்பாளர் சின்னத்தில் குளறுபடி: ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு!

வேட்பாளர் சின்னத்தில் குளறுபடி: ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் மறுவாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு மொத்தம் 108 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தமுள்ள 28,042 வாக்காளர்களில் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 76.44 சதவீதமாகும். இந்தநிலையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் பிரதான கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக இதயராணி கை சின்னத்திலும், அ.தி.மு.க. வேட்பாளராக மலர்விழி இரட்டை இலை சின்னத்திலும், பா.ம.க. வேட்பாளராக இந்திராகாந்தி மாம்பழம் சின்னத்திலும் போட்டி...
உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...
மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல்  நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் சஞ்சோய்சிட் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தந்தை சம்ஜய்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது தெரியவில்லை. வேட்பாளர் சஞ்சோய்சிட் கடந்த மாதம்தான் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தார். இதனால் தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த ச...
பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

பஞ்சாப் தேர்தல் – காலை 9 மணி வரை 4.80 சதவீத வாக்குகள் பதிவு!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
பஞ்சாப்பில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ஜலந்தரின் மிதாபூரில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார். மற்றொரு அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு,  லூதியானா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், மொஹாலியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி லூதியானாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.  காலை 9 மணி நிலவரப்படி  பஞ்சாப்பில்  4.80 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் காலை 9 மணி வரை   8.15 சதவீத வாக்குகள் பதிவாகின. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் அபய் ராம் யாதவ் சைஃபாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ...