வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

World News

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது....
மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், "37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறும்போது, "இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்...
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்....
இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது!

இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் வன்முறை தொடர்பாக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்....
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தானில் தடை!

ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தானில் தடை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதிபற்றாக்குறை, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை என பல்வேறு பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி ஷபாஸ் ஷெரீப் கூறுகையில், "தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிப்பற்ற அன்னிய செலாவணி செலவிடப்படாது" என கூறினார்....
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலிபான்கள் உத்தரவு பிறப்...
கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival

கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
கேன்ஸ் விழாவில் உற்சாகமாக பேசிய இசைப்புயல் ரஹ்மான் I Music maestro AR Rahman at Cannes Film Festival   https://youtu.be/pyfZenemetU
மர்மமான பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை!

மர்மமான பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது.  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது. இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கார்சன் கூறுகையில், ‘50 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நடைபெறவுள்ளது. புலனாய்வுத்துறைக்கு கீழ் நடைபெறும் இந்த வழக்கில், பறக்கும் தட்டுக்களால் நமது தேசத்திற்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கு நடைபெறவுள்ளது. விளக்கம...
உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது...