ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

politics

அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் கோபால்சாமி சார்பில், நெல்லை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதற்கு அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்....
கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் பங்கேற்க வந்த டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னால் இருந்து இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தமிழக ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக உள்ளனர். கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. அதுவரை இங்கு என்ன போராட்டம் நடந்தாலும் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இங்கு உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நடிகை தமிழகம் ஒரு கண் என்றால், கர்நாடகம் இன்னொரு கண் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் தமிழக மக்க...
தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

தண்டனைக் கைதியான சசிகலா சிறையில் சீருடை அணியவில்லை: மகளிர் ஆணைய தலைவி தகவல்

HOME SLIDER, politics, செய்திகள்
சொத்து குவிப்புவழக்கில் சிறைத்தண்டனை விதிக் கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் அனுபவித்து வருவது மீண்டும் தெரிய வந்துள்ளது. சிறையை பார்வையிட்ட தேசிய மகளிர் ஆணைய தலைவியே இதை ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கர்நாடக முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில் தான் அனைத்து வசதிகளும் சசிகலாவுக்கு செய...
ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் – ரிஷிகேஷ் பாபாஜி ஆசிரமம் செல்கிறார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி நடித்துள்ள காலா படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படம் வெளியாகிறது. அந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் என்று சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கான அடித்தளத்தை உறுதியாக அமைத்து வரும் ரஜினி திடீரென்று ஆன்மீக பயணமாக நாளை (10-ந் தேதி) இமயமலை புறப்படுகி...
கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி- கமல்ஹாசன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உஷா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களை...
ஆஸ்கர் விருதுகள் 2018

ஆஸ்கர் விருதுகள் 2018

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள்...
ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி பெயரை அறிவிப்பேன்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி. வி.தினகரன் இன்று தனது தொகுதியில் கொருக்குப்பேட்டை கண்ணகி நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நலிவுற்ற பிரிவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் 3-வது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்கள். அண்ணா தி.மு.க.வை தொடங்கிய போது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர். கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள். நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமி‌ஷனில் கொடுத்து இருக்கிறோம். இன்று இதில் தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்கும். கட்சியின் ப...
வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார்.  அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதுபோன்று டெல்லியை சேர்ந்த தொழி...
ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
மைசூரு பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த ஆண்டு, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் ஒரு அவதூறான கருத்தை பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதுபற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு பிரதாப் சிம்ஹா இதுவரையில் எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று மைசூரு கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும், மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது....
லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை

லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது – சிபிஐ நடவடிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்திருக்கிறார். இதற்காக அவரது நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து லஞ்சப் பணம் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் மார்ச் 1-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகர...