சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

தீபிகாவை உயிரோடு புதைப்போம் – ராஜ்புத் அமைப்பு பகிரங்க கொலை மிரட்டல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் திரைப்படம் வெளியானால், தீபிகா படுகோனே-வை உயிரோடு புதைப்போம் என்று ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் என்பவர் பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார். சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் பத்மாவத். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்துத்துவா அமைப்புக்களும், ராஜபுத்திர சாதியவாத அமைப்புக்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீதிமன்றம் மூலம் படத்திற்கு தடை வாங்கவும் அந்த அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டன. அது பலிக்கவில்லை. இந்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில், நாடு முழுவதும் ‘பத்மாவத்’ படத்தை வெளியிடுவதற்கு எந்த...
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் முதல் போராட்ட அறிவிப்பு… அரசியல் போராட்ட ஆரம்பமே உண்ணாவிரத்த்தில் தொடங்குகிறது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரப்போவதாக அறிவித்துள்ளது. பட்டாசு தொழிலுக்கு ஆதரவு கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் சிஐடியு தீவிரமாக நிற்கிறது. நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இதுமட்டுமின்றி ரூ.350 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வேலையில்லாமல் அன்றாட செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அவர்களது போராட்டம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் கந்தக பூமியான சிவகாசியில் போராடும் பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்...
சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சூர்யா பற்றிய நக்கல் நையாண்டிக்கு நடவடிக்கை தேவை… டிவி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நிலைய...
பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

பத்மாவதி படம்: பாஜக ஆளும் மாநிலங்கள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இம்மாதம் 25 ஆம் தேதி, பத்மாவதி திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் தணிக்கை துறை சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர் இப்படகுழுவினர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். அந்த தீர்ப்பில்,"மாநிலங்கள் படத்திற்கு தடை விதிப்பது, கூட்டாட்சியை ஒழிப்பதற்கு ஒப்பானது. இது ஒரு முக்கியமான விஷயம். யாருக்காவது ஏதேனும் பிரச்னை என்றால், நிவாரணத்திற்காக அதற்கான உரிய தீர்ப்பாயத்தை அணுகலாம். மாநிலங்கள் ஒரு படத்தின் உள்ளடக...
மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் `இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா, குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி, விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா துவங்கியதும் கிட்னி செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி நன்கொடை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார். விஷால் பேசிய போது, சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யு...
பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வகிக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட செனட்...
‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’   எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில், 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி ஃபரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ஃபரூக் அப்துல்லா வெளியிட ஆ.ராசா பெற்றுக் கொண்டார். ஹர் ஆனந்த் பதிப்பகம் சார்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ள...
தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவி-யை கண்டித்து எம்.ஆர்.சி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர் சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து, தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இர...
தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

HOME SLIDER, politics, செய்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு காதல் பரிசாக இதை கட்டினார். இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும் முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன் படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு ந...
பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டிய அருண் ஜெட்லி...! ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டது.  ...