புதன்கிழமை, ஜூலை 22
Shadow

politics

ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

ஆய்வின் போது பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தாரா கவர்னர்… பதறிய கவர்னர் மாளிகை மறுப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கடலூரில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி தவறு... கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் கடலூரில் ஆய்வு செய்தபோது கீற்று மறைவில் பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக கூறும் செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், வண்டிபாளையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு நடத்தினார். அம்பேத்கர் நகரில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கீற்று மறைப்பை பார்வையிட்டார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஆளுநரை கண்டு அலறியதாகவும், இதை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ஆளுநரை சுற்றிவளைத்ததாகவும் செய்திகள் வந்தன. இதை ஆளுநர் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து இணை தலைமை செயலாளர் கூறுகையில் கவுரி என்பவரது வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ஆளுநர் பார்வையிட இருந்தார். ஆனால் அதை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் துறை பெண் அதிகாரியும், ஆட்சி...
அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் கவுசல்யா. அவருடன் 'எவிடன்ஸ'அமைப்பின் நிறுவனர் கதிரும் இருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டார். ...
தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

தமிழக வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுக்கள்… ஷாக் ஆன RBI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் 14,500 ரூபாய் மதிப்புடைய கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  வருகின்றனர்.   நாட்டில் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் திடீரென புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் .  மேலும் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடும் சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றினர். இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்க...
மே 19–ந்தேதி  இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

மே 19–ந்தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33), அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இளவரசர் திருமணத்துக்கான தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மே 19–ந்தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என கென்சிங்டன் அரண்மனை நேற்று அறிவித்தது. வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெறுவதாக அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மார்க்லே, இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பின் இங்கிலாந்து குடிமகளாக மாறுகிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பட்டத்துக்கான வரிசையில் ஹாரி, 5–வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ...
புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

புத்தாண்டு தினத்தில் நடனம் ஆட சன்னிலியோனுக்கு எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பெங்களூரில் புத்தாண்டு தினத்தன்று   மான்யதா டெக் பார்க்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று ஆபாச  நடனம் ஆட உள்ளார் என விளம்பரம் செய்யப்பட்டு  வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சன்னி லியோனின் உருவ புகைப்படங்களை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்....
உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் குடும்பத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் ஆறுதல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியபாண்டியன் உடலுக்கு  முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: சோனியா காந்தி அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: சோனியா காந்தி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  132 ஆண்டுகள் வரலாற்று சிறப்பும், பாரம்பரியமும் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சோனியா தலைவராக உள்ளார். காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் அதாவது சுமார் 17 ஆண்டுகள் அவர் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சோனியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதன்பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. வீட்டில் இருந்தபடியே கட்சி மூத்த தலைவர்களை அழைத்துப் பேசி, ஆலோசனை நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுத்து வந்தார். மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது கூட அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இந்த நிலையில் 2019-ல் பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் சோனியாவிடம் நிர்ப்பந்தமான ஒன்றாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு...
ஜெ.,வின் அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

ஜெ.,வின் அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேரா சிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக் கம் அளித்தனர்.இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ண...
ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார். “சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார். ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்த...
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ராதாரவி உள்பட முன்னாள் நிர்வாகிகள் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து நடிகர் ராதாரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அடுத்த உத்தரவு வரும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் நடிகர் சங்கம் ராதா ரவி மீதான நடவடிக்கையை ரத்து செய்யவில்லை. இதையடுத்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மீது ராதாரவி செனனை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டும் நடிகர் சங்கம் சார...