பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் மருத்துவர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் கீர்த்தனா, மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனு...









