புதன்கிழமை, ஜூலை 22
Shadow

politics

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் நீடிக்கிறேன்: ராஜினாமாவை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன்..!

நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் நீடிக்கிறேன்: ராஜினாமாவை வாபஸ் பெற்றார் பொன்வண்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் சமீபத்தில் அந்தப் பதவியில் இருந்து விலகினார். தற்போது அந்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார். இது குறித்து பொன்வண்ணன்  கூறியதாவது:- நடிகர் சங்கத்தில் அனைத்து வேலைகளையும் நாங்கள் பகிர்ந்துகொண்டு செய்தோம். அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த நிலையில் விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். விஷால் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட உரிமை என்றாலும் அது வருத்தம் அளித்தது. தற்போது அவர் எதிலும் போட்டியிடவில்லை. எனவே நான் தொடர்ந்து எனது பதவியில் நீடிக்க முடிவு செய்கிறேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. முழு ஒத்துழைப்பை கொடுப்பேன். எனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுகிறேன்...
மும்பை-நாசிக் விமான டிக்கெட் விலை 1 ரூபாய்

மும்பை-நாசிக் விமான டிக்கெட் விலை 1 ரூபாய்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது. இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீரென நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங்ஃபிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனியாக செயல்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும்...
நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி  வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை

நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் “ASK” மொபைல் செயலி வெளியிட்டு சரத்குமார் நம்பிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது. பிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார். இந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, "மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினே...
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்று  வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால...
ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதா அமெரிக்கா டிவி..!?

ராமர் பாலம் புராணக்கதையா? கட்டப்பட்டதா? விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதா அமெரிக்கா டிவி..!?

HOME SLIDER, politics, செய்திகள்
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதற்கிடையே இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட  மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது. தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் மத்தியில் அமைந்...
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன.  பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிட...
பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்

பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர். மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவ...
அரசியல் முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்

அரசியல் முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில், மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68-வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தால் இப்படி கொண்டாடுவார்கள். நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. எனது தாய், தந்தை பிறந்தது கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிகுப்பம் தான். எனவே, நானும், ரஜினியும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் தான். இன்றும் நாச்சிக்குப்பத்தில் தான் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த...
ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!

ரஜினிகாந்த் பிறந்தநாள்: பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் (டிசம்பர் 12, 1950), மராட்டிய மாநிலத்தில் பிறந்தார்.  கண்டக்டராக தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். அவர் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்' படத்தின் இரண்டாவது பாகமான `2.0' படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் `காலா' படமும் உருவாகி வருகிறது. இதில் `காலா' படத்தின் இரண்டாவது கவரிகையை தனுஷ் இன்று வெளியிட்டார் ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட ...
சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு – கவுசல்யா

சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு – கவுசல்யா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு தொடர்பாக சங்கரின் மனைவி கவுசல்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என் சங்கர் சிந்திய ரத்ததிற்கு நீதி கிடைக்க ஒன்னறை ஆண்டுகளாக காத்திருந்தேன். நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போ...