செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

politics

மூன்றாவது நாளாக போராட்டக் களத்தில் செவிலியர்கள்..!

மூன்றாவது நாளாக போராட்டக் களத்தில் செவிலியர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜய பாஸ்கரன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதில் பங்கேற்ற செவிலியர்கள் தெரிவித்தனர். மன நிறைவுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு, பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாணை 191-ஐ வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் உண்ணாவிரதத்துடன் போராட்டம் நடத்துவத...
பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா-வின் விளம்பரம் ஒன்றிற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் ‘Ink, Not Mink! Be Comfortable in Your Own Skin, and Let Animals Keep Theirs.’ எனும் வாசகம் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது, நாம் நிம்மதியாக வாழ விரும்புவது போல் அவற்றையும் வாழ விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினையும் அவருடன் இணைந்து பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக அசைவத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அரைநிர்வாணமாக புகைப்படம் ஒன்றில் சன்னிலியோன் தோன்றியது குறிப்பிடத்தக்கது!...
டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது. இதையடுத்து இவாங்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்...
இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

இந்தியா வரும் ஒபாமா பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை இந்தியா வரும் ஒபாமா நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். ஒபாமா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்கிறார். நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2014  முதல் 2016 வரை பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 8 முறை சந்தித்து பேசி உள்ளனர்.  ஒபாமா பதவிக்காலம் முடிந்த பின் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை ஆகும். ஒபாமா இந்தியாவிற்கு கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது....
தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

தொழில் நுட்பத்தை விட ஐதராபாத் பிரியாணி தான் உலகபுகழ் பெற்றது – இவான்கா டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில்  தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோ சகருமான  இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட அவருக்கு அதன் ருசி மிகவும் பிடித்து இருந்தது. இதுகுறித்து இவான்கா கூறியதாவது:- பழமை வாய்ந்த ஐதராபாத் நகரம்   தற்போது தொழில் நுட்பத்தால் மிகவும்...
6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுக்கோடடை மாவட் டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ராமையா.இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் முறையான அனுமதியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவிக்க மறுக்கின்றனர். எனவே மணலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கவும், 6 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மணலை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக...
நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால்  அமு கூறி இருந்தார்.  தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால்  அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொட...
பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை  டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார்.  அவருடன் மருத்துவர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் கீர்த்தனா, மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனு...
பைனான்சியர் அன்புச்செழியனை  ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்...! பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?! இரு கடன்... ஒரு செட்டில்மெண்ட்... தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள் ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது. சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்... பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார் மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன் மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’ என்று சசிக்குமாரி...
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்று அவரது ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறினார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தினகரன் நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தினகரன் அணி மாவட்ட செயலாளர் கள் கூட்டம் இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தினகரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் ...