ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘K13’ டீசர்!
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய 'K13' டீசர்!
டீசர்கள் தான் இப்போது உண்மையான அமில சோதனைகளாக மாறி விட்டன. ஏனெனில் குறிப்பிட்ட சில நொடிகளில் படத்தின் கதை மற்றும் களம் சார்ந்த விஷயங்களை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும். மேலும், எல்லையை மீறி எந்த முக்கிய காட்சியையும் வெளிப்படுத்தி விடக் கூடாது. அப்படி வெளியானால் அது படத்தின் ஆர்வத்தை குறைத்து விடவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இயக்குனர் பரத் நீலகண்டனின் K13 டீசர் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. 84 விநாடிகள் ஓடும் இந்த டீசர் பார்வையாளர்களிடையே படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இது கடத்தல் நாடகமா? உளவியல் சார்ந்த த்ரில்லர்? அல்லது ஃபேண்டஸி படமா? என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது, "டீசரை இற...








