ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

NEWS

தடயவியல் பரிசோதனைக்கு செல்கிறது ஜெ., கைரேகை: திமுக கோரிக்கையை ஏற்றார் நீதிபதி

தடயவியல் பரிசோதனைக்கு செல்கிறது ஜெ., கைரேகை: திமுக கோரிக்கையை ஏற்றார் நீதிபதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2-வது நாளாக விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்களை வழங்கினேன். அதோடு ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட ஒரு போர்ஜரி கடிதத்தையும் வழங்கினேன். இந்த கடிதம் அன்றைய கவர்னருக்கு ஜெயலலிதாவால் அனுப்பப்பட்டதாகும். என்னுடைய விசாரணை முடிந்து விட்டது. தேவை என்றால் விசாரணைக்கு அழைப்பதாக கூறி உள்ளனர். அறிக்கையில் உள்ளதை எடுத்து சொல்லி உள்ளேன். விசாரணை கமி‌ஷன் அதை தேவைப்படும் போது பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளனர். ஜெயலலிதாவின் கைரேகையையும் அவரது கடிதத்தில் உள்ள கையெழுத்தையும் அரசு தரப்பில் தடய அறிவியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஜெயலலிதாவின் பழைய கையெழுத்துக்கும், ஆஸ்பத்திரியில் இருந்த போது போடப்பட்டதாக கூறப்படும் கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் நாங்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளோம். போர்ஜரிக்கான முகாந்திரம் இருக்கிறது என்றோம்....
ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது இரட்டை இலை சின்னம்!

ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு கிடைத்தது இரட்டை இலை சின்னம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும் ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் தரப்பினர்களும் தங்களது ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா - தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர...
ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்…

ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்... இதை படித்ததும் அதிர்ச்சியாக இருக்கும். நாடு முழுதும் கடும் எதிர்ப்பு. தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி பரிசு என பல சர்ர்ச்சைகளில் சிக்கியுள்ள பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு ஒரு கட் கூட கொடுக்காமல் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள். பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு வழங்கியிருக்க சர்டிஃபிகேட் என்ன தெரியுமா? பத்மாவதி படத்தை பிரிட்டனில் ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. இயக்குநர் சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பத்மாவதி. 190 கோடி ரூபாய் செலவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருக்கிறது பத்மாவதி படம். ராஜ புத்திர இனத்தின் ராணியான பத்மாவதியை கொச்சைப்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜ புத்திரர் இனத்தவர்களும் இந்த...
அஜீத்-சிவா-சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி மீண்டும் இணையும் விசுவாசம்..!

அஜீத்-சிவா-சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி மீண்டும் இணையும் விசுவாசம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  'விவேகம்' படத்தைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் தன்னுடைய 58-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் 58-வது படத்தின் பெயர் 'விசுவாசம்' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'விசுவாசம்' மூலம் 4வது முறையாக கூட்டணி ஆகும் சிவா-அஜித்.  இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.  ...
‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!!

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, செய்திகள், டிரைலர்கள்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘திருட்டுப்பயலே 2’. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். https://youtu.be/zVc-Oe1wZGc ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸாகியது....
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட டீசர் நவம்பர் 30ல் ரிலீஸ்

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட டீசர் நவம்பர் 30ல் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்". படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்". இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீஸர் தேதியை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான "நானா தானா" மற்றும் ''சொடக்கு மேல சொடக்கு'' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் வெற்றி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் டீசர் தேதி குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் டீசர் நவம்பர் 3...
நடிகை  நக்மாவின் வாழ்க்கைதான் ஜூலி-2 படமாம்..!

நடிகை நக்மாவின் வாழ்க்கைதான் ஜூலி-2 படமாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, செய்திகள், டிரைலர்கள்
  ஜூலி படம் தன்னுடைய கதை என்பது குறித்து அறிந்து நடிகை நக்மா அதிர்ச்சி அடைந்துள்ளார். ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் நடிகை நக்மாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்று கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் நக்மாவின் பெயரை தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் பேசியது நக்மாவை பற்றி தான் என்று பலரும் கூறுகிறார்கள். https://youtu.be/R7tsDNDmQ2M ஓ, அப்படியா? ஜூலி 2 படம் என் கதை என்று நீங்கள் சொல்லித் தான் எனக்கே தெரியும். பத்மாவதி படத்திற்கு தான் பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதனால் ஜூலி 2 படத்திற்கும் கொஞ்சம் கிடைக்கட்டும் என்று கூறியிருப்பார்கள். தற்போது ஜூலி 2 குறித்து நான் எதுவும் கூற முடியாது. படம் ரிலீஸாகாததால் அது பற்றி நான் பேசுவது நியாயம் இல்லை. வழக்கமாக நான் படம் பார்ப்பேன். ஆனால் ஜூலி படத்தை நிச்சம் பார்ப்பேன். படம் பார்த்த பிறகு பேசுகிறேன் என்று நக்மா தெரிவித்துள்ளார...
பேரை மாற்றிக்கொண்டு பேஷன் ஷோவில் களம் இறங்கிய நடிகரின் மனைவி

பேரை மாற்றிக்கொண்டு பேஷன் ஷோவில் களம் இறங்கிய நடிகரின் மனைவி

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் குடும்ப வாழ்க்கை பிரச்னையால் போலீஸ் நிலையம் சென்றவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், குழந்தையைக் கொடுமைப் படுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்திருந்தார். குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் நிலவியதை அடுத்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்துவந்த பாலாஜி இப்போது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்   சென்னையில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கலந்துகொண்டுள்ளார். ஃபேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடைபோட்ட நித்யாவை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர். நித்யா, 'Women Endeavor' எனும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான NGO அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். பழைய பிரச்னைகளிலிருந்து ...
கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அசோக்குமாரின் தற்கொலை திரையுலிகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகின் இன்றைய நிகழ்வை படம் பிடித்து காட்டுவதாக தெரிவித்த பிரகாஷ்ராஜ், நமக்கு தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரையுலகின் அனைத்து தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருப்பு பண சம்பளம் வாங்குவதை நடிகர்கள் நிறுத்த வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார். நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் பெறுவதாக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளை செலுத்தினாலும் பாதுகாப்பற்ற துறையாக திரைத்துறை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்துறையில் ...
பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....