சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து தி.மு.க.விற்காக உழைத்தார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடக்க தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக காணொலிக்காட்சி மூலம் சுமார் 150 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தேன்
இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்ன முடிவு வரும் என்று அனைவரும் அறிந்...









