சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் - அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்! டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே,  இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி:  இந்தியாவில் ஒமைக்ரான் அலை தொடங்கியுள்ளது.  கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள்.  ஒமைன்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும். ஒமைன்ரான் வைரஸின் வீரியம் குறைவானது....
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்....
நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

நீட் தேர்வு விவகாரம் – இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வு விவகாரம் - இன்று அனைத்துக் கட்சி கூட்டம்! மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதி அலுவலகம் சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் விரிவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மே...
சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா ! உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பனிச் சிற்பங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் 1963- ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் பனிச் சிற்ப திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பனிச் சிற்ப திருவிழா பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சதுர மீட்டர் அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் வகைவகையான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 65 வகையான சிற்பங்களை காட்சிப்படுத்த 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நினைவுப்படுத்தும் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் வைக்கப்பட்டுள்ளது. 24-வது குளிர்கால போட்டிகளை குறிக்கும் வகையில், 24 ...
முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மோசடி புகார்!

முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மோசடி புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மோசடி புகார் பிரபல கானா பாடகியாக  இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார். ஆண்கள் மட்டுமே கானா பாடலில் கோலோச்சிக் கொண்டிந்த நிலையில், பெண்களாலும் கானா பாடல் பாட முடியும் என்பதை நிரூபித்த இசைவாணி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடலில் இவர் பாடிய கானா பகுதி பலரையும் ஈர்த்தது. இதைத் தொடர்ந்து விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசைவாணி திருமணம் ஆன சில ஆண்டுகளில்  கணவரை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வரு...
சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு கொரோனா! இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 9,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு...
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்! உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 8 லட்சத்தை தாண்டி உள்ளது. இது உலகமெங்கும் உள்ள நோய் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷியா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உள்பட ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்ப...
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ் கிண்டல்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் கிண்டல் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் அங்கிருந்து டெல்லி திரும்பினார். https://www.facebook.com/100002752624675/videos/433964101533391/ பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். பஞ்சாப் அரசு திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனார். ஆனால்,  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு போடப...
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி! சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன. இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான் ஜ...
மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி! பொது மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீடும் இந்த ஆண்டிலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால் இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிடகோரி  மருத்துவ மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையை மறுபரிசீலனை செய்ய தயார் ...