திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இன்று ஒரு நாளில் மட்டும் 9,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்

திரை துறையிலும் தொற்று ஏற்பட்டு வருகிறது.  பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்தி நடிகர்கள் விஷால் டட்லானி, நடிகைகள் குப்ரா சைத் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் கொரானா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.  இதனையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றிய போதிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திவிட்ட போதிலும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன்.
என்னுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் தடுப்பூசி போடுமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரமாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

175 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன