செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்

 

நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில்  இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அதிகரிப்பின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது.  இதற்கு முன்னதாக தனுஷின் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் ஆகிய  படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது

அதே போல சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த அன்பறிவு படமும் சில மணி நேரங்களுக்கு முன் ஓடிடியில்தான் ரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்த்க்கது.

253 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன