செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: covid-19

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம். இந்த பரிசு தொகை குடுப்பது ஆஸ்திரியாவில். ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்து...
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்கே20 பட இசையமைப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்....
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது எப்.ஐ.ஆர், சேஸ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா வில்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ரைசா வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு 2-வது தடவையாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டும் தொற்றில் சிக்கி உள்ளேன். தலைவலி, காய்ச்சல், உடல்வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் உள்ளன நடுக்கமாக உள்ளது. இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று இ...
பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி, 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த...
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம். இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற...
கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ‛‛கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்பதால், தமிழகத்திற்கு மீண்டும் பொது முழு ஊரடங்கு தேவையில்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, சவுமியா சுவாமிநாதன், திறந்து வைத்தார். பின், சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி:கொரோனா தொற்றின் முதல் அலையில், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில், பொது முடக்கம் தேவைப்பட்டது. தற்போது, உலக முழுதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை. டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது.தற்போதைய ச...
150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து!

150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா - மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்தியாவில் 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதைக் குறிக்க...
சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சத்யராஜ், த்ரிஷா, இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோருக்கு கொரோனா! இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 9,000 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீ...
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்! உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 8 லட்சத்தை தாண்டி உள்ளது. இது உலகமெங்கும் உள்ள நோய் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷியா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உள்பட ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்...
புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- 3-வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இன்று முதல் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறையை கையா...