சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி!

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி! தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 4,862 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து இன்று 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதார அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்ட...
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை!

இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை! இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் தினசரி கொடியிறக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்....
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா!

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 டாக்டர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா! சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 481 பேருக்கு தொற்று பரவியுள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் குடிசை பகுதியில் தொற்று அதிகரித்துள்ளது. இது தவிர 52-வது வார்டில் மிண்ட் மருத்துவமனை குடியிருப்பில் 14 பேருக்கும், ஏழு கிணறில் 13 பேருக்கும் தொற்று பரவி உள்ளது. ஈ.வே.ரா. பெரியார் சாலை நால்ரோடு பகுதியிலும் தொற்று அதிகரித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் 2 டாக்டர்கள், 14 பயிற்சி மருத்துவர்கள், 4 நர்சுகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 138 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று...
ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம்!

ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம் 3000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டி அந்த வீடியோவை தலிபான்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது தலிபான் அமைப்பு. தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியா ஷாரியா சட்டத்தின்படியே ஆட்சி நடக்கும் என அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை இயக்குநரகம் சார்பில் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டில் இடம்பெற்றுள்ள வீடியோவில் பெரிய பீப்பாய்களில் இருந்து மதுபானம் கால்வாயில் கொட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் முஸ்லிம்கள் மதுபானத்தை தயாரிக்க, விற்க, அருந்தக் கூடாது எனப் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ரெய்டு எப்போது ...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஹாங்காங் தடை!

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஹாங்காங் தடை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஹாங்காங் தடை இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் ஒமைக்ரான் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளத...
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேள...
மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்!

மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்! நடிகைகள் சினிமாவில் நடிப்பதை  தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடி...
மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல் ஒரு வாரம் முன்பு 6 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, நாள்தோறும் உயர்ந்து இன்று 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 37,379 ஆக இருந்தது. நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ற்படுத்தி உள்ளது. சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் குஸ்டாப் (வயது 75). ராணி சில்வியா (78). இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அரண்மனை சார்பில் கூறும்போது, மன்னர், ராணிக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரும் நன்றாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் மன்னர், ராணி, இருவரும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும், கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!

ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து! ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் CCTV கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா மையம் நடத்த அனுமதிக்கக் கோரி NOC சான்றிதழ் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார். கடந்த ஆண்டு  இது போன்ற வேறு ஒரு வழக்கில் , உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்து உத்தரவு...