ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசுடைமையாக்கப்பட்ட சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள்!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசுடைமையாக்கப்பட்ட சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள்!

HOME SLIDER, NEWS, politics
  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.   சசிகலாவின் அக்காள் மகனான வி.என்.சுதாகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி ஆகியோருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்படுள்ளது.   இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுப்ரீம்கோர்ட்டு மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட சொத்துகளை அரசால் பறிமுதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தில் உள்ள கீழ்கண்ட சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுதாகரன், இளவரசி பங்குதாரரர்களாக உள்ள...
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!

சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் போனில் தன்னிடம் நேற்று விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் என்னிடம் விசாரித்தார். ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்....
7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார்- மு.க.ஸ்டாலின்

7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார்- மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
7 பேர் விடுதலை விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க முதல்வருடன் வர தயார் - மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகமாடுவதாக கூறுவதா? 10 ஆண்டுகளாக தொடர் நாடகமாடுவது அதிமுக அரசு தான். சட்டசபையில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை அளித்தது ஏன்? நாளைக்கே ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்....
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:- விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், அம்மா அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு அம்மா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர். 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக அம்மாவின் அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத்திட்டங்களும், வ...
7 பேர் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது – தமிழக ஆளுநர்

7 பேர் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது – தமிழக ஆளுநர்

HOME SLIDER, NEWS, politics
7 பேர் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - தமிழக ஆளுநர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தர...
மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை

மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை

HOME SLIDER, NEWS, politics
மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அ...
‘M‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் – ராகுல் டிவிட்

‘M‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் – ராகுல் டிவிட்

HOME SLIDER, NEWS, politics
‘M‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கும் சர்வாதிகாரிகள் - ராகுல் டிவிட் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் ஏன் பல சர்வாதிகாரிகள் ‘எம்‘ என்ற முதல் எழுத்தை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு கீழ்கண்ட பெயர்களை எழுதியுள்ளார். மார்கோஸ், முசோலினி, மிலோசேவி, முபாரக், மோபோது, முஷ்ரப், மிகாம்பெரோ. அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டு இருப்பதாக கருதப்படுகிறது https://twitter.com/RahulGandhi/status/1356836500076261378?s=20...
தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு

தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் மத்திய குழு இன்று ஆய்வு தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது ஒரு குழு விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கையில் இன்று, நாளை ஆய்வு மேற்கொள்கிறது. மற்றொரு குழு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் இன்று, நாளை ஆய்வு செய்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர், ஆதனக்கோட்டை, மேலூர் பகுதிகளில் காலை 9 மணிக்கு மத்திய குழு ஆய்வு செய்கிறது. மற்றொரு குழு விருதுநகர் அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடி, செங்குளம், கீழ்குடியில் 11.30 மணிக்கு ஆய்வு செய்கிறது....
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் – ம.தி.மு.க. தீர்மானம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் – ம.தி.மு.க. தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் - ம.தி.மு.க. தீர்மானம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:- * இந்தியாவில் வேளாண்மை தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் கொண்டு செல்ல வழிவகுக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். * 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கொடூரமாக கொலை செய்துள்ளது. எனவே மத்திய அரசு இலங்கை அரசு மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். * தமிழக விவசாயிகள...
7-ந்தேதி தமிழகம் வருகிறார், அதிமுக-வை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார்: டி.டி.வி.தினகரன்

7-ந்தேதி தமிழகம் வருகிறார், அதிமுக-வை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics
அதிமுக-வை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார்: டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சின்னம்மா மீதும், கழகத்தின் மீதும் உண்மையான விசுவாசமும், பற்றும் கொண்டவர் மகேந்திரன். அவரது மகள் திருமணத்தை நடத்தி வைப்பது, எனது மகள் திருமணத்தை நடத்துவது போன்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது. மணமக்களுக்கு அம்மாவின் ஆசியையும், சின்னம்மாவின் நல்வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்கள் இத்தனை நாள் எதற்காக சிறைவாசம் அனுபவித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறைவாசம் முடிந்து பெங்களூருவில் தங்கியுள்ள சி...