ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி!

பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெருமாளை வணங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து வருகிறார். இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்...
விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர்!

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலெக்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருநெல்வேலியில் நீர்வாழ் பறவைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. 16 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்ட இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் பங்கேற்றார்.
பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரக்கோணம் நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி எம்.எல்.ஏ.அவர்கள் அறிவுருத்தல் படி முன்னாள் கழக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பா.எழில்இனியன் பூ தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் நகர கழக துணை செயலாளர் எ.அன்புலாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள். வி.எஸ்.ஆர்.ரவி பூக்கடை என்.அரி மாவட்ட தொண்டர் அணி துனை அமைப்பாளர் பி.ஆர்.விமல் , மாவட்ட இல.அணி துணை அமைப்பாளர் பி.மூர்த்தி வி.மோகன் எஸ்.எழிலரசு சி.வில்வநாதன் வி.ரவி.சம்சுதீன் கே.எம்.எஸ்.பழனி ஆர்.மோகன்ராஜ் வழக்கறிஞர்.ராமமூர்த்தி ஆர்.பாலாஜி எ.எச்.ஆதம் டி.சாம் என்.எஸ்.கேசவன் வி.மனோகரன் வி.முருகன் விணோத் எஸ்.குமார் என்.நவீன் எ.அஅருண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்...
சாதிப் பெயரை சொல்லி ஸ்டாலினை வசைப்பாடியதற்கு மன்னிப்பு கேட்ட ADMK அமைச்சர்!

சாதிப் பெயரை சொல்லி ஸ்டாலினை வசைப்பாடியதற்கு மன்னிப்பு கேட்ட ADMK அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரை அருகே உள்ள பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, குறிப்பிட்ட சமுதாயத்தை மேற்கோள்காட்டி, அவர்களின் புத்திதானே ஸ்டாலினுக்கு வரும் என பேசியதாக சர்ச்சை எழுந்தது.   இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து சற்றுமுன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “செய்தியாளர் சந்திப்பில் யதார்த்தமாக நான் பழமொழியை குறிப்பிட்டேன். நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. செய்தியாளர் சந்திப்பில் நான் ஜாதி குறித்து பேசவில்லை. தேர்தல் நேரத்தில் எனக்கு யாரும் ஜாதி சாயம் பூச வேண்டாம். செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட சமுதாயம் குறித்து நான் பேசியதாக நினைத்தால் வருத்தம் தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக மதுரையில் எய்ம்ஸ் மருத...
பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். பிதமர் மோடியின் தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம். இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவேற்...
பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்!

பப்ஜி விளையாட்டுக்கு அனுமதி இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பப்ஜி மொபைல் இந்தியா என்னும் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க அனுமதியில்லை என மத்திய அரசு மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் ஒரு பெருங்கூட்டமே இந்தியாவில் அடிமையாக இருந்தது. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் முழுநேர பொழுதுபோக்காக பப்ஜி விளையாட்டு இருந்தது. சில மாணவர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு பப்ஜி விளையாட்டு மீதான மோகம் நாடு முழுவதும் இருந்தது. இதனால், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே குரல் எழுப்பினர்.  அதேநேரத்தில், இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் செல்போன் பயன்படுத்தும் தனி நபர்களின் தகவல்களை திருடுவதாகவும் புகார் எழுந்தது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் மக்களின் கோரிக்கையை மத்திய அரசும் உடனடியாக பரிசீலனை ...
பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி போன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி போன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் (ஆஸ்தீரியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்சு ஓபனில் ரபெல்நடால் (ஸ்பெயின்), இகா சுவாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றனர். பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மெல்போர்ன் நகரில் ஜனவரி 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்...
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் – விஷ்ணுவிஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் – விஷ்ணுவிஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சூரி. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் விஷ்ணு விஷால் - சூரி இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால். அதற்குப் பிறகு நீதிமன்றத்தில் வழங்கு நடைபெற்று வருவதால், எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர், "சூரியை ஏமாத்தாதீங்க தல. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த சூரி செய்திக்குப் பிறகு உங்களை வெறுக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். அந்த ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "உண்மை இன்னும் வெளியே வரவில்லை. யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெர...
டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி ஊழல்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி ஊழல்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு, அங்குள்ள மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை தொகையை வழங்க கோரி 3 மாநகராட்சிகளின் மேயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் பா.ஜனதா அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது. இது காமன்வெல்த் ஊழலை விட மிகப்பெரிய ஊழல். இதுபற்றி விவாதிப்பது வேதனையானது. அந்த பணத்தில் மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்திருக்க முடியும். தெருவில் வசிக்கும் மக்கள கூட டெல்லி மாநகராட்சியில் ஊழல் நடப்பதாக கூறுகிறார்கள். அதே மக்கள் டெல்லி அரசு நேர்மையானது என்கிறார்கள்....
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத வழங்கும் சட்ட மசோதவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது கிண்டி காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், கூட்டத்தினர் கலைந்து போகச் சொல்லியும் கலையாமல் இருப்பது, உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், நகர காவல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ...