ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம்

உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் முருகன் 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார். தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசு தன்னை ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும். விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். சிறைக்காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முருக...
தமிழகத்தில் 16ம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16ம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16ம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 24ம் தேதி நிவர் புயல் காரணமாகவும், அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் புரெவி புயல் உருவாகி தமிழகம் அருகே தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும், வடகிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர்காற்று காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் வ...
மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்…

மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வீரியத்துடன் மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்... நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பல வெற்றிகளை குவித்த நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்றத்தை “விஷால் நற்பணி இயக்கமாக” 2015 ஆம் ஆண்டு மாற்றி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எந்த ஒரு எதிர்ப்பர்பின்றி செய்தார் என்பது நாம் அறிந்தது தான். நற்பணி இயக்கமாக களம் கண்ட தன் அமைப்பை “விஷால் மக்கள் நல இயக்கமாக “ 2018 ஆம் ஆண்டு உருமாற்றி இன்னும் வீரியமாக மக்கள் நலப்பணியில் தன் ரசிகர்களோடு கரம் கோர்த்து மக்கள் நல பணியில் ஈடுப்பட்டார். இதனிடையே மற்ற நடிகர்களை போல் நேரடியாக சினிமாவிலிருந்து அரசியல் என்ற அணுகுமுறையை கையில் எடுக்காமல் தான் சார்ந்த சினிமா துறையில் நடந்த பல ஊழல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை கலைவது என முடிவெடுத்து துணிச்சலாக அத்துறை பிரச்சனைகளை கேள்விகளாக முன் வைத்து அதற்கு அன்று இருந்த நிர்வாகம் செவி சாய்க்...
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில டிஐஜி ராஜினாமா!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில டிஐஜி ராஜினாமா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில டிஐஜி ராஜினாமா விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வமான கடிதத்தை ஞாயிறன்று தலைமைச் செயலாளருக்கு  அனுப்பி வைத்துள்ளார். இதை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.இதுகுறித்து டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாகப் போராடி வரும் எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக எனது வேலையை நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது....
டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ராஜஸ்தான் விவசாயிகள் ஆதரவு!

டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ராஜஸ்தான் விவசாயிகள் ஆதரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஷாஜகான்பூரில் உள்ள ஜெய்சிங்பூர் -கேரா எல்லையில் (ராஜஸ்தான்- அரியானா எல்லை) திரண்டு வந்து போராட்டம் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்  18-வது நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்தது. தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி போராட்டத்திற்கு ஆதர...
அதானி குழுமத்தின் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!

அதானி குழுமத்தின் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஹரியானா மாநிலம், கர்நாலைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஐபிஎன்24 (IBN24) ஊடகத்தில் பணியாற்றி வருபவருமான அகர்ஷன் உப்பல், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றால், அகர்ஷன் தாக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அகர்ஷன் உப்பல் மீதான இந்த தாக்குதலின் பின்னணியில், வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அகர்ஷன் உப்பல் சமீபகாலமாக, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை அதிகமாக கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார் . எனவே, அவர் மீதான தாக்குதலுக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்...
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்!

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தற்போது தொடங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.   பெரியார் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தொடர்ந்து மேல மாசிவீதி-வடக்கு மாசிவீதி சந்திப்பில் பேசினார். "மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்; ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிகட்டு; மே மாத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு.. இதற்கு நான் தயாராகிவிட்டேன்" காமராஜர் ரோட்டில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார். மதுரையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்...
“விவசாயிகளின் 2ம் கட்ட போராட்ட அறிவிப்பால் டெல்லி நேஷனல் ஹைவே மூடல்”

“விவசாயிகளின் 2ம் கட்ட போராட்ட அறிவிப்பால் டெல்லி நேஷனல் ஹைவே மூடல்”

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 17 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனிடையே, ஜெய்ப்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலிருந்து இந்த நெடுஞ்சாலையை நோக்கி விவசாயிகள் செல்லாமல் இருப்பதற்காக இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து ஹரியானா மாநிலம் வழியாக டெல்லி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்துவத...
சோழர் காலத்து புதையலை ஒப்டைக்காவிட்டால் வீடு வீடாக வருவோம் – உத்திரமேரூர் காவல்துறை எச்சரிக்கை

சோழர் காலத்து புதையலை ஒப்டைக்காவிட்டால் வீடு வீடாக வருவோம் – உத்திரமேரூர் காவல்துறை எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சோழர் காலத்து கோவிலை புனரமைக்கும் பொழுது தங்கப் புதையல் கிடைத்துள்ளது. இதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஊர் பொதுமக்கள் அதற்கு உடன்படாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழமையான சிதிலமடைந்து காணப்பட்ட குழம்பேஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது கருவறை முன் உள்ள கருங்கல்லால் ஆன படிக்கட்டுகளை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அங்கு துணிப் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களை அவர்கள் கண்டெடுத்து உள்ளனர்.   பொதுமக்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் தகவல் ஏதும் தராமல் மறைத்ததாகக் கூற...
ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசைவர் சிற்பம்!

ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசைவர் சிற்பம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆளுநர் தமிழிசையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட வீரசைவர் சிற்பம் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே அகரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சூரியனார் கோவிலில் வீரசைவர்கள் உயிர்த்தியாகம் செய்வது போன்ற சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கோவில் குறித்த விரிவான ஆராய்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சிற்பம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் பழமை வாய்ந்த சூரியனார் கோவில் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்தனர். கோவிலைப் பாதுகாக்க உதவுவதாக ஆளுநர் தமிழிசை உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தொல்லியல் துறை இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் சூரியனார் கோவிலுக்குச் சென்று அதன் ...