ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  அதிநவீன போர் விமானம் மாயம்... தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது. தைவான் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, 44 வயதான கர்னல் ஜியாங் என்ற விமானி ஓட்டிய எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது...
தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தைப் பொங்கலுக்கு நேரடி தேர்தல் பிரசாரம் - ஸ்டாலின் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு  . நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தமிழக மக்கள் கொடுத்த அடியை விட சட்டமன்ற தேர்தலில் பலமான அடியை தருவார்கள் - ஸ்டாலின் தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தகவல்...
உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது!

உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது... தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்துப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நேற்று பயணம் தொடங்கிய அவரை, கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக நாகப்பட்டினம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த உதயநிதி, தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை இன்று நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார். அங்கு வீதியில் நடந்து சென்று மீனவ மக்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடினார். மீனவர் பிரதிநிதிகளிடமும் உரையாடிய உதய...
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 38 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு 60 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனா உயிரிழப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இருந்து வரும் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 552 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது....
வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்தது கனடா!

வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்தது கனடா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு திருடப்பட்ட அன்னபூரணி சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்தது கனடா! உத்தரபிரதேச மாநிலத்தில் காசி என்று அழைக்கப்படுகிற வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி தெய்வ சிலை, கனடா நாட்டில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கென்சி கலைக்கூடத்தில் இருந்தது. இந்த சிலை 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாரணாசியில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை திவ்யா மெஹ்ரா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இந்த சிலை, இந்து தெய்வமான அன்னபூரணியின் சிலை என்பதை இந்திய மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் டாக்டர் சித்தார்த்த ஷா அடையாளம் காட்டினார். அதைத் தொடர்ந்து இந்த சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்காக கனடா நடவடிக்கை எடுத்தது. இதில் கனடாவின் ஒட்டவா நகரில் உள்ள இந்திய துணை தூதரகமும், கனடா கலாசா...
பின்லாந்து அருகே பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்!

பின்லாந்து அருகே பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள் இருந்துள்ளனர். கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் பால்டிக் கடல் வழியே சென்றபொழுது பலத்த காற்று வீசியுள்ளது.  இதனை தொடர்ந்து மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி நின்றது. எனினும், கப்பலில் எந்த கசிவும் ஏற்படவில்லை.  இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.  இதன்பின்னர் இன்று காலை கப்பல் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது....
அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,  பாராளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடைய செய்வார்கள் என்பது உறுதி. தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி...
அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்போம். எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள். தைத் திங்கள் நேரடியாக பிரச்சாரம் தொடங்குகிறேன்....
காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பீகார் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, கபில் சிபல் காங்கிரஸ் கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் கபில் சிபலுடன் சேர்த்து குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். ஆசாத்தும் சிபலுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு ...