செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பில் இந்த வருடம் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதால், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட தயாராகி இருக்கிறார் நயன்தாரா. இதற்காக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் நயன்தாரா நிற்கும் புகைப்படமும், விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. தனக்கு பிடித்த நீலக்கலரில் தானும், விக்னேஷ் சிவன் புத்தாடைகளில் அட்வான்ஸ் ஆக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி உள்ளனர்....
லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்திய நாட்டிய விழா..!

லிப்ரா ஹவுஸ் ஆப் ஆர்ட்ஸ் நடத்திய நாட்டிய விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..! திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா 'ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்' வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில்  நடந்தது. சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் ...
நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர்  – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

நாட்டுக்காக எதையுமே செய்யாத வெற்று மனிதர் மோடி , எதற்கும் தகுதி இல்லாதவர் – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சுமத்தியுள்ளார். ‘தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறி விட்டார். குஜராத் முதல் மந்திரியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது தனது சொந்த மாநிலத்துக்கே அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், பல பெரிய காரியங்களை செய்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார். நாங்கள் அனைவரும்கூட இதை நம்பினோம். இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நம்பினார்கள், ஆனால், கடைசியில் அது மோசடி என்று தெரியவந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் குஜராத்தை நாங்கள் பின்னுக்குத்தள்ளி முன்னேறி சென்று விடுவோம் என்பதால் மோடி எங்களை வஞ்சித்து விட்டார். அன்று தன்னைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை என்று அ...
தொடரும் சோகம் இந்தோனேசியா சுனாமி – பலி 222 ஆக உயர்வு

தொடரும் சோகம் இந்தோனேசியா சுனாமி – பலி 222 ஆக உயர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது.  அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர்.இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்க...
கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
மைம் நிகழ்ச்சி நடத்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவிய நடிகர் மைம் கோபி. நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர். சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள். நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார். இது பற்றி மைம் கோபி கூறுகையில்… குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது, நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொ...
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததையடுத்து,  அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க  முடிவு செய்யப்பட்டது. கலைஞர் முழு உருவசிலை  அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் அந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அந்த சிலையை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர். சோனியா காந்தி திறந்த கலைஞர் சிலை அந்த விழாவை முடித்துக் கொண்டு நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ...
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் மக்கள் நக்சலைட் என பிஜேபி எச்.ராஜா திமிர் பேச்சு

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் மக்கள் நக்சலைட் என பிஜேபி எச்.ராஜா திமிர் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது. மேலும் ஆலையை திறந்தால் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள். நக்சல்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். இந்த போராட்டம் காசு கொடுத்து அர்பன் நக்சல் மூலம் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். மக்கள் முன்னேற கூடாது என்று நக்சல்கள் இதை எதிர்க்கிறார்கள் என்றார்....
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..! சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..! அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா மு...
ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை  வேண்டும் – ராகுல்காந்தி

ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் – ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வ...
கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய  தெலுங்கு தேச எம்பி.

கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் மத்திய அரசை எதிர்க்கும் விதமாக நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன், ஹிட்லர் என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக அணிகளைத் திரட்டி சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து இதற்கான கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதன் காரணமாக சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். கருப்பு கண்ணாடி, ...