திங்கட்கிழமை, செப்டம்பர் 21
Shadow

விக்னேஷ்சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்த ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பில் இந்த வருடம் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.
தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 


இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை இருப்பதால், தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட தயாராகி இருக்கிறார் நயன்தாரா.

இதற்காக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துடன் நயன்தாரா நிற்கும் புகைப்படமும், விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தனக்கு பிடித்த நீலக்கலரில் தானும், விக்னேஷ் சிவன் புத்தாடைகளில் அட்வான்ஸ் ஆக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாகி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன