ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்!

இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் தலைநகர் சாகிரெப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் முதலில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் அடுத்து ஆசிஜெக் நகரில் நடைபெறும் ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் போட்டி (வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை) மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஜூன் 22 முதல் ஜூலை 3-ந் தேதி வரை) ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இறுதிகட்டமாக தயாராகும் பொருட்டு குரோஷியாவில் 2½ ...
கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி!

கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கில்லி பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 48. 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும், கத்தரி வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அரபிக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (புதன்கிழமை), வியாழக்கிழமை (நாளையும்) மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வருகிற 14-ந் தேதி (நாளை மறுதினம்) தென் கி...
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை!

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரஜினி பட நடிகை! ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காலா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து டெல்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் ஹூமா குரேஷி ஏற்படுத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார். ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவே...
சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு!

சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு! தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். பிசியான நடிகையான அமலா பால் தற்போது கொரானா காலம் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை செலவிட்டு வருகிறார். அமலா பால் அவரது சகோதரர் அபிஜித் மீது அதிகம் அன்பு கொண்டவர். தனது சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை எனது சகோதரன் என்பதை, விட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே இருக்கிறாய். எனக்கு அப்பா, அம்மா அன்பு கிடைக்காதபோது, அப்பாவும், அம்மாவாகவும் இருக்கிறாய். எனது வாழ்க்கையின் கடினமான நேரங்களில் என்னோடு இருந்து என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இதுவரை ஒரு முறை கூட என்னை குறை கூறியதில்லை. என்னை வழிநடத்தியது நீ, என் வீடு, குடும்பம், ஆசீர்வாதம், சிறந்த நண்பன் ஆகியவை எல்லாமே நீதான். ஜிது நீ நினைத்து பார்க்க முடியாத அளவு...
‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் - ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு! நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூ...
புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றனர்- பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன்பிறகு எதிர்க்கட்ச...
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க - கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்! விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது. அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே...
தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்!

தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தேசிய விருது பெற்ற சினிமா இயக்குனர் டென்னிஸ் ஜோசப் திடீர் மரணம்! கேரள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப். இவர் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் ஜோசப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். டென்னிஸ் ஜோசப், மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர். கதை வசனத்தோடு, பல படங்களையும் இயக்கியுள்ளார். அப்பு, மனுஅங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழி திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. டென்னிஸ் ஜோசப் இயக்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி சபையை நடத்தினார். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ...