செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரசுடைமையாக்கப்பட்ட சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள்!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் அக்காள் மகனான வி.என்.சுதாகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின்
மனைவி இளவரசி ஆகியோருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்படுள்ளது.
இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம்கோர்ட்டு மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி
தீர்ப்பின்படி செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட சொத்துகளை
அரசால் பறிமுதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் கிராமத்தில் உள்ள கீழ்கண்ட சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சுதாகரன், இளவரசி பங்குதாரரர்களாக உள்ள...









