ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’  – திருமாவளவன்

ரஜினியின் முடிவு – ‘மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது’ – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினியின் முடிவு - 'மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது' - திருமாவளவன் நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா சந்தேகத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், இது ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என்று ரஜினி தெ...
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பிய கேரள விவசாயிகள்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பிய கேரள விவசாயிகள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு லாரி நிறைய 20 டன் அன்னாசிப் பழங்களை கேரள விவசாயிகள் அனுப்பியுள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இருந்து விவசாயிகள் லாரி நிறைய அன்னாசிப் பழங்களை டெல்லிக்கு அனுப்பினர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வாழகுளம் என்ற நகரத்தில் அன்னாசிப் பழம்விளைச்சல் அதிகமாக இருப்பதால் இது அன்னாசி நகரம் என்றுஅழைக்கப்படுகிறது. வாழகுளத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு லாரியில் 20 டன் அன்னாசிப் பழங்களை அனுப்பி வைத்தனர். அந்த லாரியை கேரள விவசாயத்துறை அமைச்சர...
சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா  தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறைக்கு சந்தேகப்படும்படியாக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும், மற்றொரு வாலிபர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வந்தார். இதைக் கண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் நிழல் ரவி (வயது 29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 2 பொட்டலங்களில் 27 தங்கக் கட்டிகள் வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர். துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளைக் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ...
2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்!

2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள்,வாங்கிய விருதுகள்! சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த ...
அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கலைப்புலி தாணு திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார்   தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் 1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டுதிரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்...
அரசியல் கட்சி தொடங்கவில்லை ரசிகர்களே மன்னித்து விடுங்கள் – ரஜினி

அரசியல் கட்சி தொடங்கவில்லை ரசிகர்களே மன்னித்து விடுங்கள் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவித்மாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும். என பதிவிட்டுள்ளார்....
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு – சுகாதார செயலாளர்

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு – சுகாதார செயலாளர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு - சுகாதார செயலாளர் உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன. இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒருவருக்கு உருமாற...
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ - முதல்வர் பழனிசாமி விமர்சனம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அதிமுக-வுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது மக்கள் நீதியம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ம...
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....