என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்பாண்டி உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை, மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது. மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.
2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆ...









