சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!

சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..! உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான Antonov AN-124 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ரஷ்யாவைச் சேர்ந்த Volga-Dnepr Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் 53.46 டன் சரக்குடன் சென்னைக்கு வந்தது. சீனாவின் ஜியாங் நகரில் இருந்து பிரமாண்டக் கருவிகள் இதில் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறை. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை இருப்பதால், இனிமேல் பெரிய ரக சரக்கு விமானங்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 69.1 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகள் மட்டும் இரு புறமும் சேர்த்து 73.3 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரமாண்ட உபகரணங்கள், ராணுவத...
ஆர்டர் செய்தால் வீட்டுக்கு வரும்  அல்சஃபி ஆம்பூர் பிரியாணி… சென்னையில் புதிய கிளை

ஆர்டர் செய்தால் வீட்டுக்கு வரும் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி… சென்னையில் புதிய கிளை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  25 வருடங்கள் பாரம்பரியம் மிக்க அல்சஃபி ஆம்பூர் பிரியாணி சென்னையில் திறப்பு சென்னையில் பல்வேறு வகையான புது புது உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்களின் நாவுக்கு ஏற்ற சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. அந்த வரிசையில் மக்களின் மனதுக்கு நெருக்கமான,  கடந்த 1993 ஆம் ஆண்டு ஆம்பூரில்  தொடங்கப்பட்ட அல்சஃபி  ஆம்பூர் பிரியாணி உணவகம் தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், கடந்த 25 வருடங்களாக ஆம்பூரின் நம்பர் ஒன் பிரியாணி உணவகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் ...
7பேரை  விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

7பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்த...
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ்2 டேனி..!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த பிக்பாஸ்2 டேனி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திரும...
மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.  சென்னை திரும்பிய பிறகு இன்று காலை மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
ஜானகி எம்.ஜி.ஆர். ஆக ரித்விகா ..!

ஜானகி எம்.ஜி.ஆர். ஆக ரித்விகா ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான். எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாகY.G.மகேந்திரன்...
அரசியல் இல்லா மக்கள் பணி தனிக்கொடி அறிவித்தார் விஷால்..!

அரசியல் இல்லா மக்கள் பணி தனிக்கொடி அறிவித்தார் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  "விஷால் மக்கள் நல இயக்கம்" கொடியை அறிமுகம் செய்தார் விஷால் ! நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி.ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்கு போக கூடாது.நடிகனாக நல்லா சம்பாதித்து நாமலும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முட...

செப்டம்பர் 30-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா- தமிழக அரசு அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது குமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நட...
மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு: முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு: முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம். உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்...
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
4 மாதத்தில் பழைய மிரட்டலோடு பார்ப்பீர்கள் என பார்த்தீபனிடம் சொன்னாராம் விஜயகாந்த்..! தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார்....