ஜெயலலிதா உருவச்சிலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி ஜெயலலிதாவின் சிலை ஆந்திராவில் தயாரிக்கப்பட்டது.
அந்த சிலை முழு உருவ வெண்கல சிலையாகும். ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போன்று 7 அடி உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அந்த சிலை சென்னை கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலையை நிறுவ முடிவு செய்யப்பட...









