காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்
என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்!
திண்டுக்கல் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம்
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கம் வருமாறு:
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு பேசினார்.
‘நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும்...









