தீபாவளி வசூல்வேட்டை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி சிக்கியது
தீபாவளி வசூல்வேட்டை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி சிக்கியது
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பண்டிகைகாலத்தையொட்டி, அரசு அலுவலகங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, லஞ்சஒழிப்பு காவல்துறையினர், பல அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 35 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடம் இருந்து கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், . சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சோ...









