ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா

நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா

HOME SLIDER, NEWS, politics
நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி இந்த சோட்டா ராஜன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி. 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யட்டார். தாவூத் இப்ராஹிம் பழக்கம் ஏற்பட்டது அவருக்காக இந்தியாவில் பல நாசவேலைகளைச் செய்து கொடுத்துள்ளார் சோட்டா ராஜன். அந்தக்காலக்கட்டத்தில் சோட்டா ராஜன் பெயரில் வழக்குகள் பதிவானாலும் எந்த வழக்கிலும் இவரை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை. இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் 1988-ல் சோட்டா ராஜன் துபாயில் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்து சோட்டா ராஜன் கட்டளையிட இந்தியாவில் இவருக்கு வேலைசெய்ய பலர் தயாராக இருந்தனர். தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் விலகியதும் அவரது உயிருக்கு ஆபத்து வந்தது. 2000-ம் ஆண்டு பாங்காங்கில் வைத்து தாவூத்...
லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
லண்டனில் மே 11-ந் தேதி ‘பிரிட் இசை விருது விழா’ மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர் நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் ...
பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் இந்திய பயணிகளுக்கு தடை!

பிலிப்பைன்ஸ், கம்போடியாவில் இந்திய பயணிகளுக்கு தடை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக,  அறிவிப்பு வெளியாகி உள்ளது. “இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மற்றும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் இருந்து வந்த பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த தடை வரும் மே 14 வரை கடைப்பிடிக்கப்படும்” என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். பிலிப்பைன்சில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 204 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் போல கம்போடியா நாட்டிலும் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பயணிகள்...
மராட்டியத்தில் 22 உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து எடுத்துச் சென்ற அவலம்!

மராட்டியத்தில் 22 உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து எடுத்துச் சென்ற அவலம்!

HOME SLIDER, NEWS, politics
மராட்டியத்தில் 22 உடல்களை ஒரே ஆம்புலன்சில் திணித்து எடுத்துச் சென்ற அவலம்! மராட்டிய மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை நகரில் சுவாமி ராமானந்த தீர்த்தர் அரசு ஊரக மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள பிணவறையில், கொரோனாவால் இறந்தவர்கள் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் இங்கிருந்து, கொரோனாவால் இறந்த 22 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டன. இது பற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சிவாஜி சுக்ரே கூறுகையில், ஆஸ்பத்திரியில் போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டது கடந்த ஆண்டு கொரோனா முதலாவது அலையின்போது ஆஸ்பத்திரியில் 5 ஆம்புலன்ஸ் கள் இருந்தன. அவற்றில் 3 ஆம்புலன்ஸ்கள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதால், 2 ஆம்புலன்ஸ்களை கொண்டு சமாளிக்...
அசாமில் நிலநடுக்கம்

அசாமில் நிலநடுக்கம்

HOME SLIDER, NEWS
  அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்ததாகவும் இது பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும் அசாம் மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்  ...
ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- சுப்ரீம்கோர்ட்

ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- சுப்ரீம்கோர்ட்

HOME SLIDER, NEWS, politics
  ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்- சுப்ரீம்கோர்ட் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சுப்ரீம்கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர தயார்” என்று தெரிவித்தது. அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, “ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறியது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் இயக்க அனுமதிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஸ்...
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு!

கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு! நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுகிறது. முதல்முறையாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 66 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரத்து 311 பேரும், கர்நாடகாவில் 34 ஆயிரத்து 804 பேரும் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 684 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர முழு ஊரட...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றியை கொண்டாட தடை! தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், “கரூர் தொகுதி ஓட்டுக்களை எண்ணும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்து இருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை” என்று கூறி இருந்தார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது. கூடுதலாக 6 மேஜைகள் போடப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அ...
தேர்தல் வெற்றியை கொண்டாட தடை

தேர்தல் வெற்றியை கொண்டாட தடை

HOME SLIDER, NEWS, politics
தேர்தல் வெற்றியை கொண்டாட தடை இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2771 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநி...