ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் - நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி! தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின. இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் வைரலாக...
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது! இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரை பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட டைரக்டர் பாலச்சந...
இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் படி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் செய்த அடாவடிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின. இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார். "கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார் இந்ந...
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல...
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங்கை ஐகோர்ட் சரமாரி கேள்வி! மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் 100 கோடி ரூபாய் மாமூல் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி தெரிவித்தாக முன்னாள் கமிஷனர் பரம் வீர் சிங் புகார் கூறினார். இது தொடர்பாக அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மந்திரி அனில் தேஷ்முக் பதவி விலகக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மந்திரி அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காவல் துறை அதிகாரி பரம் வீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், பரம் வீர் சிங்கிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. நீங்க...
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்! சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி க...
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்....
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா பரவலால் திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- பக்தர்கள் அவதி! ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு மலைப்பாதையில் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த ஏராளமான பக்...
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி! கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெ...
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்காளர் சீட்டு வினியோகம் தொடங்கியது ! தேர்தல் நடக்கும் சமயங்களில் வாக்காளர்கள் மிக எளிதாக வாக்கு அளிப்பதற்காக வாக்காளர் சீட்டு வழங்குவது வழக்கத்தில் உள்ளது. முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர் சின்னத்துடன் வாக்காளர் சீட்டு அச்சடித்து வீடுவீடாக வினியோகம் செய்வார்கள். அரசியல் கட்சிகள் வாக்காளர் சீட்டுகளை வினியோகிப்பதால், குழப்பம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு சீட்டு வினியோகம் செய்வதை தேர்தல் ஆணையமே மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் பெண் வாக்காளர்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் வாக்களிப்பதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி...