கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்..!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது. கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
திரையரங்குகளுக்கு அரசு 8 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. திரையரங்குகளுக்கான லைசென்ஸ் ...









