ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும்,  அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி....
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்! ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்ப...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை! முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்....
விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  விவசாயிகளுக்கு என்னற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார். இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்: “தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின் நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.   பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.   விழாவில், டாக்டர் ஏ.பி...
சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்!

சவால் விட்ட மீரா மிதுன்…. அதிரடியாக கைது செய்த போலீசார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சவால் விட்ட மீரா மிதுன்.... அதிரடியாக கைது செய்த போலீசார்! நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும் என்று மீரா மிதுன் சவால் விட்டு இருந்தார். இந்நிலையில், மீராமிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் மீராமிதுனை கைது செய்துள்ளனர். போலீசார் விரைவில் மீராமிதுனை சென்னைக்கு அழைத்து வர இருக்கிறார்கள்....
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்! தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:- * தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. * தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யப்படும் * வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் * நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்படும் * தமிழகத்தி...
வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்!

வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்! பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் வளரும். ஆனால் கர்நாடகத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு 2 கிலோ எடை அளவில் எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. இந்த அரிய எலுமிச்சை பழம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ் என்பவரின் வீட்டில் காய்த்துள்ளது. இவர் அந்தப் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார். அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது. மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதை பார்த்து சனோஜ் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். அத்துடன் இதுபற்...
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு! தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்க...
நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!

நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்! தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை இழிவாகப் பேசிய நடிகை ...