ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசு! தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்! சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒருசில வழித்தடங்களில் இயக்கப்பட்ட சென்னை புறநகர் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. பயணிகள் கூட்டம் இல்லாததால், நஷ்டம் ஏற்பட்டதால் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு வரக்கூடிய மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்க கூடுத...
தமிழனை வைத்து தமிழகத்தை உளவு பார்க்க சதி செய்கிறதா இலங்கை?!

தமிழனை வைத்து தமிழகத்தை உளவு பார்க்க சதி செய்கிறதா இலங்கை?!

NEWS, உலக செய்திகள்
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். அதன்படி இந்தியாவிற்கு வந்தவர், முதலில் கேரள மாநிலத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்த வெங்டேஷ்வரன், தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் சீனா துறைமுகத்தை கட்டமைத்து வருகிறது. இலங்கையை தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக பல்வேறு திட்டங்களை தீட்ட சீனா திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதன் ஒரு பகுதியாகத்தான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ர...
#admk முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் #ரெய்டு பாஜக அண்ணாமலை  புது கருத்து!

#admk முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் #ரெய்டு பாஜக அண்ணாமலை புது கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
  #admk முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் #ரெய்டு பாஜக அண்ணாமலை புது கருத்து!   https://youtu.be/mjnYI_JiNYg
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் – நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் - நடிகர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை! ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு உரிய விசாரணைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா, நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்....
ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி!

ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி! வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்தவகையில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் (வெள்ளை லேபிள் ஏ.டி.எம்.) பணம் இல்லாமல் இருந்தால...
‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாயை கொலை செய்த சிறுமி! நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உண்டு. மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். அந்த தம்பதியின் மகளுக்கு 15 வயதே ஆன நிலையில், அவளை நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்தில் பதிவு செய்தனர். ஆனால் டாக்டருக்கு படிக்க தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து வந்தாள். இதை ஏற்காத பெற்றோர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும்படி சிறுமியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சிறுமி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அவளது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்க...
கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்!

கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா காலத்திலும் இந்திய கோடீசுவரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த அடியை ஏற்படுத்தி இருக்கிறது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய செல்வந்தர்கள் மாறியிருக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2018-ம் நிதியாண்டில் ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை வெறும் 77 ஆக இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 2020-ம் நிதியாண்டில் இது 141 ஆகவும், 2021-ம் நித...