ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு! வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை அவரது பிள்ளைகளுக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல்...
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! வங்கக்கடலில், தெற்கு அந்தமான் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இன்னும் சில மணி நேரங்களில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி பின் மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்....
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்... வலுக்கும் எதிர்ப்பு! நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார். தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாச...
நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு!

நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாளை உருவாகும் காற்றழுத்தம்- புயல் சின்னமாக மாற வாய்ப்பு! வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமுதல் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாவதற்கான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் இல்லாததால் தள்ளிப்போனது. இந்தநிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை (30-ந்தேதி) உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- தெற்கு ...
கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
கடும் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்! பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேலும், முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஒத்திவைப்புக்கு பிறகு, மக்களவையில் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. அப்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கிடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்ட ரத்து மசோதாவை விவாதிக்...
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழை நீர் பாதிப்பு முடிவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். இதே போல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி...
விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விட்ராதீங்க முதல்வரே... பேரரசு அறிக்கை! பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டில் கல்லூரிகளில...
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்- அரசியல் சாசன தின விழாவில் மோடி பேச்சு! அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட வி...
அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு! அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உரையாற்றுகிறார்கள். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன....
பொதுமக்கள் கவனமாக இருங்கள்… 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

பொதுமக்கள் கவனமாக இருங்கள்… 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொதுமக்கள் கவனமாக இருங்கள்... 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விட்டு விட்டு கனமழை  பெய்து வருவதால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலுர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது....