ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும்  வரவேண்டாம் – பேரறிவாளன்

பரோலில் வந்துள்ள தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் – பேரறிவாளன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர். ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையி...
‘இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன்’ சசிகலா பேசியதாக  ஆடியோ வைரல்!

‘இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன்’ சசிகலா பேசியதாக ஆடியோ வைரல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
'இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன்' சசிகலா பேசியதாக ஆடியோ வைரல்! சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:- https://www.youtube.com/watch?v=DEwL01ZvGTY ஹலோ லாரன்ஸ் நல்லா இருங்கீங்களா, தொண்டர்: நல்லா இருக்கோம்மா... உங்க குரல கேட்கவே சந்தோஷமாக இருக்குமா... சசிகலா:  வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா தொண்டர்: எல்...
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:- நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போ...
3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு! தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தொற்று நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்கள...
ஒரு தொகுதிக்கு 13 கோடி 20 தொகுதிகளுக்கு 260 கோடி தேர்தலில் பாஜக கொட்டி குவித்த கருப்புப் பணம்! SV.சேகர் வாக்குமூலம்!

ஒரு தொகுதிக்கு 13 கோடி 20 தொகுதிகளுக்கு 260 கோடி தேர்தலில் பாஜக கொட்டி குவித்த கருப்புப் பணம்! SV.சேகர் வாக்குமூலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் ஸ்பேசசில், (Twitter Spaces) பா.ஜ.க தோற்றது குறித்து பேசுவது வைரலாக சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.வி.சேகரின் ஒரு நண்பர் அவரிடம் கூறுகிறார் : ‘சாதி பொலிடிக்’ சில் போகும் போதுதான் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. நாம் ‘இந்துக்களா’ உடைந்து போயிடுவோ மோன்னு... என்கிற நண்பருக்கு எஸ்.வி. சேகர் பதிலளிக்கிறார். ‘இந்துக்களாக’ ஒண்ணு சேர முடியாது சார்.. நான் இன்னைக்குக் கூட ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கேன். ‘வேல்.. வேல்...ன்னு போனதாலே ஜெயிச்சிட முடியும்னு நெனைச்சா எப்படி முடியும்?’ அவரு வேல் வேல் வெற்றி வேல் என்பாரு... இன்னொருத்தன் ‘ஓம் நமசிவாயா’ என்பான், இன்னொருத்தன் ஓம்... நமோ... நாராயணா என்பான். பார்த்தசாரதி கோவிலுக்கு போறவங்க.. கபாலி கோயிலுக்கே வரமாட்டாங்க.. அப்படி இருக்கும் போது முண்டகக்கண்ணி அம்மன் கோவில் இருக்குது. வீரப்பசாமின்னு எத்தன...
நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு – திருமாவளவன் எம்.பி கண்டனம்!

நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு – திருமாவளவன் எம்.பி கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி அரசு - திருமாவளவன் எம்.பி கண்டனம்! தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் குடிமக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது இது தொடர்பாக  திருமாவளவன் எம்.பி வெளியிட்ட அறிக்கையில், பாஜக அரசு வகுத்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் -2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசாங்கம் கோரினால் அவற்றைத் தொடர்புடைய நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசாங்கம் சுட்டிக்காட்டுகிற பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும்; இவற்றைச் செய்வதற்கு பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்த...
இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது!

இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது! இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீறு கொண்டு பரவி வந்தது. தினசரி பரவல் 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது. ஆனால் தொடர் ஊரடங்கு பொதுமுடக்கம், கடுமையான கட்டுப்பாடுகளை பல மாநிலங்கள் பின்பற்றி வருகிற நிலையில் தொற்று பரவலும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த  24 மணி நேரத்தில் 1.73-லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 28 ஆயிரத்து 724- ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை முந்தைய நாளைவிட  1.14 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 601- ஆக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 90.80 சதவிகிதமாக உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம்...
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் சத்தம் இல்லை…  காலியாக கிடக்கும் 600 படுக்கைகள்!

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் சத்தம் இல்லை… காலியாக கிடக்கும் 600 படுக்கைகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமாக இருந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக இவ்வாறு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இப்போது ஆம்புலன்ஸ் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசே‌ஷமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 2050 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை எப்போதும் நிரம்பி வழிந்தன. 2 வாரங்களுக்கு முன்பு வரை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி முன்பு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் காத்து கிடக்கும் நிலை இருந்தது. ஆம்புலன்சிலேயே பலர் உயிரிழக்கும் சம்பவமும் நடந்தது. ஆனால் இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை வெகுமாக குறைந்து வருவதால் ஆம்புலன்ஸ்கள் எதுவும் காத்து இருப்பது இல்லை. தினமும் 250...
பத்மாசேஷாத்ரி பாலியல் பள்ளிக்காக திமுக ஆட்சியை கலைப்பாராம் சுப்ரமணியசாமி?

பத்மாசேஷாத்ரி பாலியல் பள்ளிக்காக திமுக ஆட்சியை கலைப்பாராம் சுப்ரமணியசாமி?

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
பத்மாசேஷாத்ரி பாலியல் பள்ளிக்காக திமுக ஆட்சியை கலைப்பாராம் சுப்ரமணியசாமி? https://youtu.be/YHNk4bwYkLs
முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி!

முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் - சிம்பு நெகிழ்ச்சி! தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இந்நிலையில், நடிகர் சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் டுவிட்டரில் நடிகர் சிம்புவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்க...