ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

234 தொகுதிகளிலும் தோல்வி… 3-வது இடம் இடம்பிடித்த நாம் தமிழர் கட்சி!

234 தொகுதிகளிலும் தோல்வி… 3-வது இடம் இடம்பிடித்த நாம் தமிழர் கட்சி!

HOME SLIDER, NEWS, politics
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அ.ம.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. பெரும்பான்மையான கட்சிகள் கூட கூட்டணி வைத்து தான் இந்த தேர்தலை சந்தித்தன. ஆனால் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல இந்த முறையும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே தான் களம் கண்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து களத்தில் போட்டியிட்டு வருகிறது. அந்தவகையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 1.10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்ட...
15 ஆண்டுகளுக்குப் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு செல்ல உள்ள மதிமுக!

15 ஆண்டுகளுக்குப் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு செல்ல உள்ள மதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  2006 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு மதிமுக உறுப்பினர்கள் 4 பேர் செல்ல உள்ளனர். மதிமுக இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 6 சின்னத்தில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மதிமுக வேட்பாளர்கள் சட்டசபைக்குள் செல்ல உள்ளனர். கடைசியாக 2006-2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற போது 35 சீட்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட மதிமுகவால் ருசிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் இவர்தான்!

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் இவர்தான்!

HOME SLIDER, NEWS, politics
தமிழக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தனிப் பெரும்பானமையோடு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே மிகப்பெரிய வெற்றியை திமுக வேட்பாளர் ஐ பெரியசாமி பெற்றுள்ளார். ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகள் பெற்றனர். இதன் மூலம் 1,30,000 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் ஐ பெரியசாமி பெற்றுள்ளார்...
கேரளாவில் பாஜக தொடங்கிய கணக்கை முடித்துவிட்டோம் – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் பாஜக தொடங்கிய கணக்கை முடித்துவிட்டோம் – முதல்வர் பினராயி விஜயன்

HOME SLIDER, NEWS, politics
  கேரளாவில் பாஜக தொடங்கிய கணக்கை முடித்துவிட்டோம் - முதல்வர் பினராயி விஜயன் கேரள சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் சிபிஐ (எம்). ஆட்சி அமைக்கிறது தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கேரளாவில் ஒரு வெற்றி கூட அமையவில்லை. இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து பேசியபோது முதல்வர் பினராயி விஜயன் “கடந்த 5 ஆண்டுகள் முன்பு பாஜக கேரளாவில் கணக்கை தொடங்கியது தற்போது நாங்கள் அதை முடித்து வைத்துள்ளோம்” என கூறியுள்ளார். மேலும் கட்சி வெற்றியை மக்களுக்கு சமர்பித்துள்ள...
25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை தன் வசமாக்கிய திமுக!

25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை தன் வசமாக்கிய திமுக!

HOME SLIDER, NEWS, politics
  தலைநகர் சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. திமுக என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சென்னை திமுகவின் கோட்டையாக இருந்துள்ளது.பல தேர்தல்களில் படுதோல்வி அடைந்த போதும் சென்னையில் கணிசமான வாக்கு வங்கியை எப்போதும் திமுக வைத்திருந்தது. இந்நிலையில் இந்த முறை சென்னையின் 16 தொகுதிகளையும் திமுக வெற்றிபெற்று மீண்டும் தங்கள் கோட்டை சென்னை என நிருபித்துள்ளது. திமுக 1996 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த 16 தொகுதிகளில் வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டது. மற்ற 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை தன் வசமாக்கிய திமுக!  ...
விருத்தாசலத்தில் பிரேமலதா டெபாசிட் இழந்தார்!

விருத்தாசலத்தில் பிரேமலதா டெபாசிட் இழந்தார்!

HOME SLIDER, NEWS, politics
விருத்தாசலத்தில் பிரேமலதா டெபாசிட் இழந்தார்! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது  தேமுதிக இதில்  ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதா...
உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics
உதயநிதி ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனிடையே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்” என்று கனிமொழி பதிவிட்டுள்ளார். https://twitter.com/KanimozhiDMK/status/1388933397146263552?s=20...
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

HOME SLIDER, NEWS, politics
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கேரளாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பினராயி விஜயன், மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜிக்கு, டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘‘மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களை (மம்தா பானர்ஜி) வாழ்த்துகிறேன். கொரோனா பரவல் உள்ள இந்த சூழலில், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, உங்களுடைய மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்வீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மீண்டும் ஒரு வெற்றிக்கரமான ஆட்சிக்காலம் அமைய தி.மு.க. சார்பில் வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார். இதேபோல பினராயி விஜயனுக்கு, மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் அனுப்பிய வாழ்த்து செய்தி...
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் - மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார் நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றி...
அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் – வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் – வட கொரியா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - வட கொரியா எச்சரிக்கை   அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை...